4வது குற்றவாளி.. பாபா சித்திக் கொலையாளிகளுக்கு வீடு பிடித்து கொடுத்து ‘ஸ்கெட்ச்’ போட்ட அக்தர்!
மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் கொலை வழக்கில், நான்காவது குற்றவாளியான முகமது ஜீஷன் அக்தர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்து, அவர்களுக்கு ஆயுதம் வழங்கிக் கொடுத்தவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜீஷான் அக்தர் என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் (66) மும்பை பாந்தரா கிழக்கு பகுதியில் நேற்று இரவு (அக்டோபர் 12) சுட்டுக் கொல்லப்பட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது இரண்டு பிரிவாக பிரிந்துள்ள நிலையில், நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்ட பாபா சித்திக், அஜித் பவாரின் பிரிவைச் சார்ந்தவர் ஆவார். அஜித் பவார் சிவசேனா - பாஜக கூட்டணி ஆட்சியில் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக உள்ளார்.

மூன்று பேர் கொண்ட கும்பல், முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். நெஞ்சு பகுதியில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த பாபா சித்திக்கை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர். அந்த மூன்று பேரில் இருவரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்றாவது நபர் தப்பிவிட்டார்.
ஹரியானாவை சேர்ந்த 23 வயது குர்மைல் பல்ஜித் சிங் என்பவரும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான தரம்ராஜ் ராஜேஷ் ஆகிய இரு குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிவ கௌதம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் உடன் தொடர்புடையவர்கள் என்றும் எனவும் போலீஸ் வர்ராஎஅ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாபா சித்திக் படுகொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கேங்ஸ்டர் கும்பல் பொறுப்பேற்றிருப்பதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சல்மான் கான், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் குழுவினருடன் பாபா சித்திக் தொடர்பு வைத்திருந்ததாலேயே அவரை சுட்டுக் கொலை செய்ததாகவும் அவருக்கும் தங்களுக்கும் எந்த முன்விரோதமும் இல்லை எனவும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தெரிவித்துள்ளது என்கிறது மும்பை போலீஸ்.
பாபா சித்திக்கை சுட்டுக் கொன்ற குர்மெய்ல் மற்றும் தரம்ராஜ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஷிவ்குமார் தலைமறைவாக உள்ளார். கூடுதலாக, பஞ்சாப் மாநிலம் நகோடரில் உள்ள ஷகர் கிராமத்தைச் சேர்ந்த முகமது ஜீஷான் அக்தர் என அடையாளம் காணப்பட்ட நான்காவது குற்றவாளி இதில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறையின் கூற்றுப்படி, ஜீஷான் அக்தர் 2022 ஆம் ஆண்டில் குற்ற வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பாபா சித்திக்கை சுட்டுக் கொன்ற மூன்று பேரையும் அக்தர் வெளியில் இருந்து இயக்கியதாக கூறப்படுகிறது. கொலையின் போது சித்திக் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல்களை அக்தர் அவர்களுக்கு வழங்கி உள்ளார். மேலும் கொலையாளிகளுக்கு வாடகை அறைகளை ஏற்பாடு செய்து கொடுத்ததோடு, ஆயுதங்களையும் வழங்கியதாக கூறப்படுகிறது.
லாரன்ஸ் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாட்டியாலா சிறையில் அக்தர் அடைக்கப்பட்டிருப்பதாக பஞ்சாப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த அக்தர், பின்னர் அந்த கும்பலுடன் தொடர்பு கொண்டதாகவும், அதன் பிறகு கொலை திட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டு அரங்கேற்ரி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications