உச்சக்கட்ட அதிர்ச்சி.. மொத்தம் 8 பேர்.. ஓடும் ரயிலில் பெண் பலாத்காரம்.. கொள்ளை.. மும்பையில் பரபரப்பு
8 பேர் கொண்ட கும்பல், பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்
மும்பை: ஓடும் ரயிலில் 8 பேரும் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..
இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் குற்றங்கள் பெருகி கொண்டிருக்கிறது.. பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.
இந்த குற்றங்கள் பேருந்து, ரயில் நிலையங்களிலும் பெருக ஆரம்பித்துள்ளது.. ஏற்கனவே ரயில்களில் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல் அதிகமானதால், ரயில்வே பாதுகாப்பை அதிகரித்து, ரயில்வே அமைச்சகமும் நிறைய முயற்சிகளை மேற்கொண்டது.

மும்பை
இதனால் ஓரளவு குற்ற செயல்கள் தடுக்கப்பட்டாலும், முற்றிலும் நீங்கவில்லை.. இன்றும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.. ரயிலில் ஏறிய ஒரு கும்பல் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளது.. உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து மும்பைக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது மகாராஷ்டிர மாநிலம் இகாத்புரி என்ற ஸ்டேஷனில், 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஏறியது..

மிரட்டல்
அவர்கள் கையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.. ரயிலின் ஏசி கோச்சில் அந்த கும்பல் ஏறி கொண்டது... பிறகு அங்கிருந்த பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை போன்றவற்றை கொள்ளை அடித்து கொண்டது.. இறுதியில் அந்த ரயிலில் பயணம் செய்த ஒரு பெண்ணை 8 பேருமே சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்..

பயணிகள்
அந்த பெண்ணுக்கு 30 வயதிருக்கும் என்கிறார்கள்.. இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் இதனை தடுக்க வந்துள்ளனர்.. ஆனால், அந்த கும்பல், பயணிகளையும் கத்தியை காட்டி மிரட்டியதுடன், சிலரை வெட்டி காயப்படுத்தவும் செய்தது.. இதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.. அதற்குள் கசரா என்ற ஸ்டேஷன் வந்துவிடவும், அந்த கோச்சில் இருந்த பயணிகள் கத்தி கூச்சல் போட்டு காப்பாத்துங்க என்று சத்தம் போட்டனர்..

போலீசார்
இதனைக் கேட்டு அங்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து, கொள்ளை கும்பலில் 4 பேரை கைது செய்தனர்.. மற்ற 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.. கைதான 4 பேரிடமிருந்து 34,000 ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.. இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications