மம்மி.. "உன்னோடது" ஏன் அப்பா கார்ல இருக்க.. மகளின் கேள்வி... ஆடிப்போன அப்பா.. குழம்பிய அம்மா!

குழந்தைகள் சில நேரம் பேசும் போது புத்திசாலித்தனமாக இருப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் பேசும் போது வம்பில் போய் முடிந்து விடும் சில நேரங்களில் காமெடியாக மாறி விடும். அப்படித்தான் 4 வயது சிறுமியின் கே

Subscribe to Oneindia Tamil

மும்பை: அப்பாவின் காரில் பெண்ணின் ப்ரா இருப்பதாக கூறிய 4 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டார். அதை அவர் தனது மனைவிக்கு புரிய வைப்பதற்குள் நெருப்பாற்றில் நீந்த வேண்டியதாகி விட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் இப்போது மாஸ்க் அணிந்துதான் வலம் வருகின்றனர். இதே இரண்டு வருடங்களுக்கு முன்பு மாஸ்க் ஒரு அதிசயமான பொருளாகவே இருந்திருக்கிறது. குழந்தைகளுக்கு எல்லாம் மாஸ்க் பற்றி ஏதாவது கருத்து இருந்திருக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் இந்த உலகத்தை தாக்குவதற்கு முன்பு யாராவது மாஸ்க் அணிந்திருந்தவர்களை பார்த்தால் அவர்கள் காற்று மாசில் இருந்து தப்பிக்க அணிந்திருக்கலாம் அல்லது ஏதாவது நோய் தாக்கியிருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றும் இப்போதோ மாஸ்க் அணியாதவர்களைப் பார்த்துதான் ஆச்சரியப்படுவார்கள்.

சுவாரஸ்யமான ட்வீட்

சுவாரஸ்யமான ட்வீட்

2018ஆம் ஆண்டு ஆங்ரிமேன் என்பவர் போட்ட ஒரு டிவீட் இப்போது வைரலாகியுள்ளது. காரணம் இருக்கு. அவரது 4 வயதான மகளால் வந்த சுவாரஸ்ய குழப்பம் இது. அந்த சிறுமி தனது அம்மாவிடம் கேட்ட கேள்விதான் அது. " அம்மா உன்னோட ப்ரா ஏன் அப்பாவோட கார்ல இருக்கு? என்று கேட்டுள்ளார் மகள்.. இதைக் கேட்டு அம்மாவுக்குக் குழப்பம்.. அப்பாவுக்கோ அதிர்ச்சி.. ஏன்னா அவருக்கும். அதுக்கும் சம்பந்தமே இல்லையே என்பதால்!

மாஸ்க் ஏற்படுத்திய மரண கலாட்டா

மாஸ்க் ஏற்படுத்திய மரண கலாட்டா

என் கார்ல எப்படி பிரா வரும்.. சான்ஸே இல்ல என்று அப்பா புலம்ப.. என்னங்க நடந்துச்சு உண்மையைச் சொல்லுங்க என்று அம்மா துருவ.. குடும்பத்தில் குட்டி கலாட்டா. சிறுமியோ எதுவும் புரியாமல் வேடிக்கை பார்க்க.. கடைசியில் 3 பேரும் கார் ஷெட்டுக்குப் போய் காரைத் திறந்து பார்க்க.. அப்போதுதான் தெரிந்தது .. முன் சீட்டில் கவிழ்ந்து கிடந்தது மாஸ்க் என்று.. பார்க்க அச்சு அசல் பிரா போலவே இருந்ததால் 4 வயது செல்லக்குட்டி ப்ரா என்று தவறாக நினைத்து விட்டது.

குழந்தைகளின் கேள்விகள்

குழந்தைகளின் கேள்விகள்

குழந்தைகள் சில நேரங்களில் அதீத புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள். கேட்கக்கூடாத இடங்களில் கேட்கக்கூடாத கேள்வியை கேட்டு அவர்கள் அப்பாவித்தனமாக இருந்து கொள்வார்கள். அதே நேரத்தில் பெரியவர்கள்தான் அந்த கேள்வியால் தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்கிச் கொள்வார்கள். பள்ளிகளிலும் சில நேரங்களில் ஆசிரியர்களிடம் கேட்கும் கேள்விகளால் திணறடித்து விடுவார்கள்.

மாஸான மாஸ்க் கேள்வி

மாஸான மாஸ்க் கேள்வி

குழந்தைகளுக்கு பொய் சொல்லத்தெரியாது என்றாலும் அவர்களின் கேள்விகளால் பெற்றோர்களுக்கு இடையே சில சிக்கல்களை ஏற்படுத்தி விடும். அப்படித்தான் இந்த கேள்வி கேட்ட சிறுமியால் தனது மனைவியின் கோபப்பார்வையை எதிர்கொண்டார் அந்த அப்பாவி கணவர்.

ப்ரா பிரச்சினை

ப்ரா பிரச்சினை

2018ஆம் ஆண்டு போடப்பட்ட அந்த ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது. சுவாரஸ்யமான அந்த குட்டிக்கதையை படித்து பலரும் தங்களின் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். அந்த கதையை விட ட்வீட்டுகளே சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு மாஸ்க் எப்படி ஒரு குழந்தையின் கற்பனையில் ப்ராவாக மாறி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது பாருங்கள். இருந்தாலும் எதுக்கும் ஜாக்கிரதையா இருங்கப்பா.. பிடிக்காத யாராச்சும் மாஸ்க்குக்குப் பதில் நிஜமான பிராவைப் போட்டு வச்சு பஞ்சாயத்தைக் கூட்டிடப் போறாங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+