பொருளாதாரத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.. அவர்கள் கவனமே வேறு.. ரகுராம் ராஜன் பொளேர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மத்திய அரசு, அரசியல் மற்றும் சமூக அர்ஜெண்டாக்களை நிறைவேற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதால், பொருளாதாரத்தை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது. இதுதான், பொருளாதார மந்த நிலைக்கு நாட்டை அழைத்துச் சென்றுவிட்டது என்று கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் ரகுராம்ராஜன். இவருக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் உரசல் ஏற்பட்ட நிலையில் பதவி நீட்டிப்பு செய்யப்படாமல் வெளியேறினார்.

இந்த நிலையில் இந்திய பொருளாதாரம் தொடர்பாக ப்ளோம்பர்க் டிவி சேனலுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறி உள்ளதை பாருங்கள்:

அரசியல்

அரசியல்

இந்தியா தனது சக்திக்கும் குறைவாக பொருளாதார வளர்ச்சியை கொண்டு சென்று கொண்டு இருக்கிறதே, இதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, அது ஒரு சோகக்கதை. சமீபத்திய காரணம் அரசியல்தான் என்று அவர் பதில் சொல்லியுள்ளார். மத்திய அரசு பெரும் மக்கள் செல்வாக்குடன் மீண்டும் பதவிக்கு வந்துள்ளது. அது முழுக்க முழுக்க தனது அரசியல் மற்றும் சமூக அஜெண்டாவை நிறைவேற்றிக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

பணமதிப்பிழப்பு

பணமதிப்பிழப்பு

பொருளாதார வளர்ச்சியில் அல்ல. பணமதிப்பிழப்பு மற்றும் மோசமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி போன்றவற்றின் காரணமாக துரதிர்ஷ்டவசமாக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்தது. அது மீண்டும் வளர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தாக வேண்டியுள்ளது.

நிதித்துறை

நிதித்துறை

நிதித்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்யவில்லை. இது வளர்ச்சி விகிதத்தை குறைத்து விட்டது. இதுபோன்ற சில விஷயங்களில் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பொருளாதாரம் இந்த நிலைக்கு போயிருக்காது.

தொழில்துறை

தொழில்துறை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கண்டிப்பாக பொருட்களை சப்ளை செய்யக்கூடிய சங்கிலித் தொடரில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது உண்மைதான். நிறுவனங்கள் ஒரே இடத்தில் ஆலைகளை நிறுவாமல், பல்வேறு பிராந்தியங்களில் அவற்றை விரிவுபடுத்துவது இது போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்ப வழி வகுக்கும், என்று யோசிக்க தொடங்கும் காலகட்டம் இது. இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+