Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்சல்கானை வீழ்த்திய சத்ரபதி சிவாஜி புலி நகம்.. 350 வருடங்களுக்கு பிறகு இந்தியா வருகிறது!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜி, பிஜாப்பூர் சுல்தான் அப்சல் கானை கடந்த 1659 ஆம் ஆண்டில் வீழ்த்த பயன்படுத்திய புலி நகம் ஆயுதம் நவம்பர் மாதம் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு எடுத்து வரப்பட உள்ளது.

சத்ரபதி சிவாஜி, அரசனாக பதவியேற்று தற்போது 350 வது ஆண்டாகிறது. இதனை முன்னிட்டு மகாராஷ்டிரா அரசு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள விக்டோரியா - ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் அவரது புலி நகத்தை மீண்டும் மகாராஷ்டிராவுக்கே எடுத்து வருகிறது.

Government of Maharashtra bringing Shivajis tiger claw from London to India

3 ஆண்டு கண்காட்சிக்காக இந்த நகத்தை இந்தியாவுக்கு எடுத்து வரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மகாராஷ்டிரா கலாச்சாரத் துறை அமைச்சர் சுதீர் முங்கதிவார் லண்டனுக்கு நாளை செல்கிறார். இதுகுறித்து பேசிய அவர், "முதல் கட்டமாக புலி நகத்தை எடுத்து வருகிறோம். நவம்பர் மாதம் அது இந்தியா வரும். இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளோம். அப்சல் கானை சத்ரபதி சிவாஜி வீழ்த்திய நாளில் அதை கொண்டு வர முயல்கிறோம்." என்றார்.

வாக் நாக் என்று அழைக்கப்படும் புலி நகம் இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்ட பிறகு தெற்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1659 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதாப்காட் போரில் சத்ரபதி சிவாஜி பெற்ற வெற்றியே மராத்தா அரசை அமைக்க திருப்பு முனையாக அமைந்தது.

அப்சல் கான் தலைமையிலான படைகளை சத்ரபதி சிவாஜி வீழ்த்தியதே அவரை சிறந்த போர் தந்திரியாக அடையாளப்படுத்தியது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள பிரதாப்கர் கோட்டையில்தான் அப்சல் கானை சத்ரபதி சிவாஜி வீழ்த்தினார். சிவாஜியின் போர் திறன், வீரம், ஆற்றலை பறைசாற்ற அவரது வரலாற்றில் இந்த போர் முக்கிய இடம் பிடித்து உள்ளது.

இது குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் சுதீர் முங்கதிவார் தெரிவிக்கையில், "ஒரு கூட்டத்தில் சத்ரபதி சிவாஜியின் முதுகில் அப்சல் கான் குத்தியபோது புலி நகத்தை கொண்டு அந்த கோடூரனை அவர் கொன்றார். அது எங்களுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும். சிவாஜி ஆட்சி அமைத்து இது 350 வது ஆண்டாகும்." என்றார்.

அதே நேரம் இந்த புலி நக ஆயுதத்தின் உண்மை தன்மை என்பது மகாராஷ்டிராவில் தொடர்ந்து விவாத பொருளாகவே இருந்து வருகிறது. வரலாற்று ஆய்வாளர் இந்தர்ஜித் சாவத் தெரிவிக்கையில், "இந்த புலி நகம் சத்ரபதி சிவாஜியால் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது இல்லை என லண்டன் விக்டோரியா - ஆல்பர்ட் அருங்காட்சியகம் தெரிவிக்கிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகனும் முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவும் இந்த புலி நகத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+