நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தகுதி நீக்க விவகாரம்.. அமித்ஷா - உத்தவ் தாக்கரே இடையே வலுத்தது மோதல்! கடும் ‛அட்டாக்'
மும்பை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள விளக்குத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கும் நோட்டீஸில் உத்தவ் தாக்ரேவின் சிவசேனா ஆதரவு அளித்ததை சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தான் தற்போது அமித்ஷாவிற்கு, உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை நாளில் தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதிமன்றம் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். இது செயல்படுத்தப்படவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே தான் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி திமுக எம்பி கனிமொழி தலைமையில் ‛இந்தியா' கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் நோட்டீஸ் வழங்கினர். ‛இந்தியா' கூட்டணியின் 120 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் நாடாளுமன்ற லோக்சபாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கை தொடர்பான விவாதம் நடந்தது. அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, ‛‛நீதிமன்ற வழக்கில் தோற்றால் உடனடியாக அவர்கள் (இந்தியா கூட்டணி) நீதிபதியை குற்றம்சாட்டுகிறார்கள். ஒரு நீதிபதி தீர்ப்பு கொடுத்தார் என்பதற்காக அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை. வாக்கு வங்கி அரசியலை திருப்திப்படுத்துவதற்காக தான் இந்த பதவி நீக்க தீர்மானம்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது தான். எனவே இந்த நாட்டின் மக்கள் மக்கள் ஒருபோதும் அவர்களுக்கு (இந்தியா கூட்டணி) உதவி செய்ய மாட்டார்கள்'' என்று ஆக்ரோஷமாக கூறினார். அதுமட்டுமின்றி மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா (உத்தவ் அணி) தலைவருமான உத்தவ் தாக்கரேவையும் விமர்சனம் செய்தார். ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய அவரது கட்சி எம்பிக்கள் ஆதரவு அளித்த நிலையில் அமித்ஷா விமர்சனம் செய்தார்.
அமித்ஷாவின் இந்த கருத்து தற்போது அவருக்கும், உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே மோதலாக மாறி உள்ளது. அதேபோல் உத்தவ் தாக்கரே, அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி உத்தவ் தாக்கரே கூறியதாவது: ‛‛அமித் ஷா எனக்கு இந்துத்துவம் கற்றுக்கொடுக்கும் நிலையில் இல்லை. அவர் முதலில் தனது கட்சியின் அமைச்சர்களை பார்க்க வேண்டும். அமைச்சரவையில் கிரண் ரிஜிஜு போன்ற மாட்டிறைச்சி உண்ணும் அமைச்சர்கள் உள்ளனர். எனவே அமித்ஷா முதலில் சுயபரிசோதனை செய்ய வேண்டும். உங்கள் அமைச்சரவையில் உள்ள கிரண் ரிஜிஜு மாட்டிறைச்சி உண்பதாக கூறியுள்ளார்.
நீங்கள் இந்துத்துவாவை ஊக்குவிப்பதாக சொன்னால், உங்கள் மாட்டிறைச்சி உண்ணும் அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்வீர்களா?. சாது ஒருவரை கொன்ற வழக்கில் தொடர்புடைய ஒருவரை அமித் ஷா பாஜகவில் சேர்த்தார். அவர் இந்துத்துவாவிற்கு என்ன செய்தார்? பிறருக்கு இந்துத்துவாவைக் கற்றுக்கொடுக்கும் முன், அமித் ஷா தனது சொந்த இந்துத்துவாவை ஆராய வேண்டும்'' என்று காட்டமாக கூறினார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications