"மார்பகத்தை அழுத்துவது குற்றமல்ல" கண்டித்த உச்ச நீதிமன்றம்! இப்ப அலகாபாத் நீதிபதியின் கேள்வி பாருங்க
மும்பை: சிறுமி மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு ஒன்றில் உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சமீபத்தில் கூறிய கருத்துபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.. இந்நிலையில், மற்றொரு பாலியல் வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது, மீண்டும் சலசலப்பை கூட்டி வருகிறது. நீதி கேட்டு கோர்ட்டுக்கு சென்ற பெண்ணுக்கு, நீதிபதியின் கேள்வி மிகுந்த அதிர்ச்சியையும் உண்டு பண்ணி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கசகங்ச் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார். அதே பகுதியை சேர்ந்த பவன் மற்றும் ஆகாஷ் இருவரும், அந்த சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் (இரவு உடை) கயிற்றை அவிழ்த்து ஒரு கால்வாய் அருகே இழுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

போக்சோ வழக்கு பதிவு
அப்போது அந்த வழியாக சிலர் வந்ததால் அவர்களை பார்த்ததும் அந்த சிறுமியை விட்டுவிட்டு 2 பேரும் தப்பி ஓடிவிட்டார்கள். இதுதொடர்பான வழக்கு பாட்டியாலி போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் போக்சோவில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இருவரும் அலகாபாத் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை கடந்த 20ம் தேதி விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, "குற்றம் சாட்டப்பட்ட பவன் மற்றும் ஆகாஷ் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், அவர்கள் பாதிக்கப்பட்டவரின் மார்பகங்களைப் பிடித்தனர். பாதிக்கப்பட்டவரின் ஆடைகளை அவிழ்க்க முயன்றனர் என்பதுதான்.
வன்கொடுமை குற்றம் கிடையாது
பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டனர் என்பதற்கான ஆதாரம் இல்லை. அதனால் சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும், அவரின் பைஜாமா அவிழ்ப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது என்று கூறியிருந்தார்.
மார்பகங்களை பிடித்து அழுத்துவது பாலியல் குற்றத்தின் கீழ் வராது என்று நீதிபதி கூறியிருந்த கருத்து, மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.. சோஷியல் மீடியாவில் விவாதத்தையும் உண்டுபண்ணியது. நீதிபதியின் அந்த கருத்தினை, சுப்ரீம் கோர்ட்டும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
மது அருந்திய பெண்
இந்நிலையில் மற்றொரு பாலியல் பலாத்கார வழக்கில், மற்றொரு நீதிபதி தெரிவித்திருக்கும் கருத்து, மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது இளம்பெண் ஒருவர், மது அதிகமாக அருந்திவிட்டதால், தன்னுடைய ஆண் நண்பர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்.. ஆனால், அந்த ஆண் நண்பரோ, அந்த பெண்ணை வேறு இடத்துக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துவிட்டார்.
எனவே தன்னை பலாத்காரம் செய்த ஆண் நண்பர் மீது நடவடிக்கை கேட்டு, பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு தந்துள்ளார். இதனை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி, "ஆண் நண்பருடன் விரும்பி தானே சென்றீர்கள்?" என்று அந்த பெண்ணிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதீத போதையில் இளம்பெண்
தொடர்ந்து நீதிபதி தன்னுடைய உத்தரவில், பலாத்கார புகார் கூறியுள்ள பெண், டெல்லியில் எம்ஏ படித்து வந்தார். கடந்தாண்டு செப்டம்பர் 21ம் தேதி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் குடித்துள்ளார்.. அதிகாலையை தாண்டியும் மது குடித்துள்ளனர்.
அதீத போதையில் இருந்ததால், அந்தப் பெண், தன்னுடைய ஆண் நண்பர் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தார்.
ஆனால், ஆண் நண்பர், தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், வேறொரு உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் கூறியுள்ளார்.
தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களில் இது நிரூபிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ள வாக்குமூலம் மற்றும் வழக்கின் தன்மையை ஆராயும்போது, இது பலாத்காரமாக தெரியவில்லை. பரஸ்பர ஒப்புதலுடன் நடந்த உடலுறவாகவே தெரிகிறது.
இதை பலாத்காரமாக கருத முடியாது
முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் பெண் என்பதால், எது சரி, எது தவறு என்பதை நிச்சயம் இந்தப் பெண் உணர்ந்திருப்பார். அவருடைய குற்றச்சாட்டு உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், இநத பிரச்சனையை அவரே வரவேற்றுள்ளார். அதனால், அதற்கு அவர் தான் பொறுப்பாளி. இதை பாதிக்கப்பட்ட பெண்ணும் கூறியுள்ளார். இதை பலாத்காரமாக கருத முடியாது என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டிருக்கிறார்.
நீதி கேட்டு நீதிமன்றம் சென்ற பெண்ணுக்கு, "இது பலாத்காரம் அல்ல, பரஸ்பர சம்மதத்துடன் நடந்த உடலுறவு" என்று கூறி, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications