அய்யோ கார் டிக்கியில் தொங்கிய கை! குலை நடுங்கிய வாகன ஓட்டிகள்! போலீஸ் விசாரணையில் பகீர் ட்விஸ்ட்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் காரின் பின்புறத்தில் (டிக்கி) ஒரு பெண்ணின் கை மட்டும் தெரிந்தது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை கிலியில் ஆழ்த்தியது. விசாரணையில் ட்விஸ்ட் நடந்தது.
நவி மும்பையில் வசி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிஸியான சாலை ஒன்றில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது மாலை 6.45 மணி இருக்கும். அந்த கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. காரின் பின்னால் சென்றவர்கள் திடீரென அந்த காரின் டிக்கியை பார்த்தனர்.

அப்போது அதிலிருந்து ஒரு கை தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பலர் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பினர். இந்த வீடியோ போலீஸாரின் கண்களிலும் சிக்கியது.
இந்த வீடியோவை பார்த்த போலீஸாரும், சினிமா காட்சிகளில் வருவதை போல் யாரையோ கொன்றுவிட்டு சடலத்தை அப்புறப்படுத்த கார் டிக்கியில் போட்டு கொண்டு செல்கிறார்கள் என்றே போலீஸாரும் கருதினர்.
உடனடியாக காரின் உரிமையாளரை அதன் பதிவு எண்ணை வைத்து வெறும் 2 மணி நேரத்தில் கண்டுபிடித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்று அந்த உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஒரு லேப்டாப் கடை வைத்திருப்பதாகவும் அதை பிரபலப்படுத்த இது போல் பிராங்க் வீடியோ செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் அந்த காரை போலீஸார் சோதனை செய்த போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எதுவும் கிடைக்கவில்லை.
அதாவது அந்த காரில் கை தெரியும் போது வாகன ஓட்டிகள் காரின் டிரைவரை நிறுத்தி, கார் டிக்கியை திறக்க சொல்வார்கள். அப்போது அந்த காரில் இருக்கும் நபர் வெளியே குதித்து நான் சாகவில்லை, உயிருடன் இருக்கிறேன் என ரீல்ஸ் போட்டு அதை தனது லேப்டாப் கடையை பிரபலப்படுத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அவர் காரை ஒருவரும் நிறுத்தவில்லை. மாறாக அஞ்சி, போலீஸார் கண்ணில் படும்வரை வீடியோவை பகிர்ந்தனர். தற்போது ரீல்ஸில் அதிக லைக்குகள் , கமென்ட்டுகள் கிடைப்பதற்காக இது போன்ற பிராங்க் வீடியோக்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட கூடாது என போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். இந்த தகவல் அறிந்த நெட்டிசன்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.












Click it and Unblock the Notifications