"பெரிய சர்ப்ரைஸ்!" மகாராஷ்டிராவில் தாக்கரேவுக்கு பெரிய வெற்றி.. ஆனாலும் 2ஆம் இடத்தில் சின்ன ட்விஸ்ட்
மும்பை: மகாராஷ்டிராவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்தபடி தாக்ரே ஆதரவு சிவசேனா வென்ற நிலையில், அங்கு மற்றொரு சர்பரைஸும் உள்ளது.
நாடு முழுவதும் 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.
இதில் 4 தொகுதிகளில் பாஜக வென்ற போதிலும், 3 தொகுதிகளில் இதர பிராந்திய கட்சிகள் வென்றது. தெலங்கானாவில் கடும் போட்டி நிலவிய நிலையில், கேசிஆர் கட்சி வென்றது.

மகாராஷ்டிரா
இதில் மகாராஷ்டிரா மீது தான் அனைவரது கவனமும் குவிந்து இருந்தது. ஏனென்றால், ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர்கள் தாக்கரே அரசைக் கவிழ்த்த பின்னர் நடந்த முடிவில் தேர்தல் இதுவாகும். தாங்கள் தான் ரியல் சிவசேனா என அடித்துக் கொண்டு வரும் நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தாக்கரே தரப்பினர் தான் முன்னிலையில் இருந்தனர்.

தாக்கரே
இறுதியில் தாக்கரே அணி சார்பில் களமிறங்கிய ருதுஜா லட்கே அனைவரும் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றார். உண்மையில் அங்கு ருதுஜா லட்கே தான் வெல்வார் என அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகவே பாஜக கடைசி நேரத்தில் இந்த இடைத்தேர்தலில் இருந்து பின்வாங்கியது. அதேபோல மகா விலாஸ் கூட்டணியில் இருந்த என்சிபி, காங்கிரஸ் கட்சிகளும் இவருக்கே ஆதரவு தெரிவித்தது.

சர்ப்பரைஸ்
இதனால் அவரது வெற்றி என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். இதைத் தாண்டியும் இந்த தேர்தல் முடிவில் உள்ள ஒரே ஆச்சரியம் என்னவென்றால், இதில் போட்டியிட்ட மற்ற ஆறு வேட்பாளர்களை விட நோட்டா சின்னத்துக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. நோட்டாவை ஒரு வேட்பாளராக நாம் எடுத்துக் கொண்டால் அதற்குத் தான் இரண்டாவது இடம். சுமார் 15%, அதாவது 12806 வாக்குகள் நோட்டா சின்னத்தில் பதிவாகி உள்ளது.

பின்வாங்கிய பாஜக
ருதுஜா லட்கேயின் கணவரும், சிவசேனா எம்எல்ஏவுமான ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் உயிரிழந்த நிலையில், இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. உயிரிழந்த சினவசேனா எம்எல்ஏவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாஜக தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இருப்பினும், பாஜக நடத்திய ரகசிய சர்வே-இல் குறைந்தது 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவுக்கு தோல்வி நிச்சயம் எனத் தெரிந்ததாலேயே இதில் இருந்து பின்வாங்கியதாக சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.

தாக்கரே
இந்த தொகுதியில் ஷிண்டே தரப்புக்குப் பெரியளவில் ஆதரவாளர்கள் இல்லை. எனவே, பாஜக தனியாகவே தாக்கரே ஆதரவாளர்கள் எதிர்கொள்ளும் சூழல் இருந்தது. இங்குள்ள பெரும்பாலான மராத்தி வாக்காளர்கள் எப்போதுமே தாக்கரேவுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். உத்தவ் தாக்கரேவின் உறவினர் ராஜ் தாக்கரே கூட பாஜகவை வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மும்பை தேர்தல்
இருப்பினும், விரைவில் மும்பை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் படுதோல்வி அடைந்தால் அவமானம் என்பதாலேயே பாஜக கடைசி நேரத்தில் இதில் இருந்து விலகியதாக தாக்கரே ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், இந்தத் தேர்தல் முடிவுகளே விரைவில் நடக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

சிவசேனா
தாங்கள் தான் ரியல் சிவசேனா என இரு தரப்பும் கூறி வரும் நிலையில், சிவசனே கட்சியைப் பெயரையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. இதில் சிவசேனா தரப்புக்கு சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) என்ற பெயரும் எரியும் டார்ச் சின்னமாகவும் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதேபோல ஷிண்டே தரப்புக்கு பாலாசாஹேபஞ்சி சிவசேனா என்ற பெயரும் மற்றும் வாள் மற்றும் கேடயம் சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications