3வது மொழியாக பள்ளிகளில் இந்தி..? கடும் எதிர்ப்பால் முடிவை கைவிட்டது மகாராஷ்டிரா பாஜக அரசு!
மும்பை: மும்மொழிக் கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கும் முடிவைக் கைவிட்டது மகாராஷ்டிரா அரசு. மகாராஷ்டிராவில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை, 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை திரும்பப் பெற்றுள்ளது அம்மாநில பாஜக அரசு.
இருமொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள பெரும்பாலான மாநிலங்கள், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து வருகின்றன. மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக, மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பட்நாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிரா அரசு, மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டது.

மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இந்தி கற்பிக்கப்படும் என்று அம்மாநில அரசு கடந்த ஏப்ரல் மாதம் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது. மராத்தி மற்றும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிக் கூடங்களில் 1 ஆம் வகுப்பு முதல் மூன்றாவது பொதுவான மொழியாக இந்தி கற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வேறு ஒரு இந்திய மொழியை 3-வது மொழியாக கற்க விரும்பினால் அதற்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது இந்தி மொழியை திணிக்கும் முயற்சி என்று கூறி எதிர்க்கட்சிகளும் மராத்தி மொழி அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அரசின் முடிவுக்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 1 ஆம் வகுப்பில் இருந்து இந்தி கற்றுக் கொடுக்கப்படும் என்ற முடிவுக்கு அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாரும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இருவரும் இணைந்து ஜூலை 5 ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்துவதாக அறிவித்தனர்.
இதேபோல அடுத்தடுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் சிவசேனா அறிவித்தது. இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் பின்வாங்கியுள்ளது மகாராஷ்டிரா அரசு.
மகாராஷ்டிராவில் இந்தியை 3வது மொழியாக கற்பிக்கும் தீர்மானத்தை ரத்து செய்துள்ளார் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். பள்ளிகளுக்கான மும்மொழிக் கொள்கை குறித்த திருத்தப்பட்ட தீர்மானத்தை மகாராஷ்டிர மாநில அரசு ரத்து செய்துள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, பேசிய மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ், "மொழிகள் எந்தத் தரத்தின்படி செயல்படுத்தப்பட வேண்டும், எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கு என்ன தேர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முன்னாள் எம்.பி டாக்டர் நரேந்திர ஜாதவ் தலைமையில் ஒரு குழு அமைக்க முடிவு செய்துள்ளோம்.
இந்தக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து மாநில அரசு இறுதி முடிவை எடுக்கும். அதுவரை, ஏப்ரல் 16 மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட இரண்டு அரசுத் தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மகாராஷ்டிராவில் வரும் ஜூலை 5 ஆம் தேதி நடைபெற இருந்த பேரணி வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சிவசேனா அறிவித்துள்ளது. பள்ளிகளில் இந்தி திணிப்பு முயற்சியை எதிர்த்து நடைபெற இருந்த போராட்டம், அரசின் பின்வாங்கலால் வாபஸ் பெறப்படுவதாக உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சித் தலைவர் சஞ்சய் ராவத் அறிவித்துள்ளார்.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications