உண்மையான இந்துக்களா இருந்தா சாய்பாபா கோயிலுக்கு போகாதீங்க! ஹிந்துத்துவா தலைவர் புது சர்ச்சை
மும்பை: இந்துக்கள் சாய்பாபவை வணங்குவதை நிறுத்த வேண்டும் என இந்துத்துவா அமைப்பின் தலைவர் ஒருவர் கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சாம்பாஜி பிடே. இவர் ஸ்ரீ சிவபிரதிஷ்தான் ஹிந்துஸ்தான் எனும் இந்துத்துவ அமைப்பின் நிறுவனராவார். இவரது கருத்துக்கள் கடந்த காலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒருமுறை பெண் நிருபர் ஒருவர் இவரிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளிக்க மறுத்த அவர், அந்த பெண் நிருபரை பார்த்து, "நீங்கள் பொட்டு வைக்கவில்லை. எனவே நான் உங்களுக்கு பேட்டியளிக்க போவதில்லை. நீங்கள் அடுத்த முறை வரும்போது மறக்காமல் பொட்டு வைத்து வாருங்கள்" என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.

அதேபோல காந்தியின் குடும்பத்தை வேறு ஒரு மதத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று மற்றொரு கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது "இந்துக்கள் சாய்பாபாவை வணங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், அவருடைய கோயிலுக்கு செல்வதையும் நிறுத்த வேண்டும். அவர் இந்து கடவுள் இல்லை" என்று கூறியுள்ளார்.
மேலும், "இந்துக்கள் அவரை மதிக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர் அதற்கு தகுதியானவரா என்பதை இந்துக்கள் சரிபார்க்க வேண்டும்.இந்துக்கள் முதலில் தங்கள் வீடுகளில் இருந்து சாய்பாபாவின் புகைப்படங்கள் மற்றும் சிலைகளை அகற்றி எறிய வேண்டும். சாய்பாபாவை கடவுளாக கருத கூடாது" என்று கூறியுள்ளார். சாம்பாஜி பிடேவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், என்சிபி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. சிவசேனாவின் அஜித் பவார் அணியினர் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.
முன்னதாக காந்தியின் குடும்பத்தை வேறு ஒரு மதத்துடன் ஒப்பிட்டு பேசியதற்காக அவர் மீது மும்பை போலீஸ், 153A, 505-2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதி செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் கமிஷ்னர் கூறுகையில், எங்களிடம் அவர் காந்தியின் குடும்பம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து ஆடியோ இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications