பாஜகவிடம் பவரை காட்டிய ஆர்எஸ்எஸ்.. மகாராஷ்டிராவில் பார்த்த வேலை! ரிசல்ட்டையே புரட்டி போட்டுட்டாங்களே
மும்பை: மகாராஷ்டிராவில் தற்போது பாஜக கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தொடக்கத்தில் தொங்கு சட்டசபை உருவாக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் பாஜக கூட்டணி தற்போது மாபெரும் வெற்றியை நோக்கி நடைபோட்டு வருகிறது. அங்கே பாஜக மீண்டும் கம்பேக் கொடுக்க ஆர்எஸ்எஸ் செய்த அரசியல் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
தற்போது வரை வெளியான முடிவுகளில் பாஜக கூட்டணி - பாஜக 125 இடங்கள், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 35, ஷிண்டே சிவசேனா - 55 இடங்களில் முன்னிலை. பாஜக கூட்டணி மொத்தமாக 227 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் கூட்டணி - காங்கிரஸ் 22, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - 13 இடங்கள், உத்தவ் தாக்கரே சிவசேனா 17இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக 57 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
லோக்சபா தேர்தல்: முன்னதாக லோக்சபா தேர்தல் சமயத்தில்.. ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடிக்கு எதிராக பலர் அதிருப்தியில் இருந்தனர். ஆர்எஸ் எஸ் அமைப்பில் இருந்து பாஜகவில் இணைந்த ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட தலைவர்களை மோடி ஒதுக்கி வருவதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. அதனால்தான் கடந்த முறை ஆர்எஸ்எஸ் லோக்சபா தேர்தல் பணிகளை செய்யவில்லை. மோடியை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை, என்று செய்திகள் வந்தன.
ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே உரசல் நிலவுவதாக வரக்கூடிய செய்திகளுக்கு இடையேதான் பாஜக தலைவர் ஜேபி நட்டா, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து பாஜக கட்சி தனியாக சுதந்திரமாக வளர்ந்துள்ளதாகவும், இனி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.
பாஜகவின் தேசிய தலைவரே இப்படி நேரடியாக ஆர்எஸ்எஸ் பற்றி குறிப்பிட்டது தேசிய அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியது. முக்கியமாக 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் இந்த பிரச்சனை நடந்ததுதான் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஏற்கனவே மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் பாஜக சரிய.. அங்கே ஆர்எஸ்எஸ் தேர்தல் பணிகளை செய்யாததே காரணம். பத்தாண்டுகள் மத்தியில் பாஜகவும், உத்தரபிரதேசத்தில் ஏழு ஆண்டுகளும் ஆட்சியில் இருந்த நிலையில், ஆர்எஸ்எஸ் வட்டாரங்களில் பாஜக மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசாங்கம் "அவர்களுடையது" என்ற போதிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பெரிய அளவில் பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்தே லோக்சபா தேர்தலில் ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் பெரிதாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று கூறப்பட்டது.. லோக்சபா தேர்தலில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பாஜகவில் மோடிக்கு எதிராகவே வேலை செய்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கிறார்கள். மோடிக்கு எதிராக திட்டமிட்டு வேலை பார்க்கிறார்கள். மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு வேலை பார்க்கிறார்கள். பாஜகவில் சிறந்த தலைவர்.. மிக சிறந்த தலைவர் வாஜ்பாய். பாஜகவின் மிக மென்மையான தலைவர் அவர். அப்படி ஒரு தலைவரை பாஜகவில் பார்க்க முடியாது.
அவர் தன்னை முன்னிறுத்தியது இல்லை. ஆனால் மோடி தன்னை முன்னிறுத்துகிறார். இப்போதும் கூட அவர் தன்னை முன்னிறுத்துக்கொள்கிறார். பாஜகவிலேயே இதை பலரும் விரும்பவில்லை. மோடி தன்னை மட்டும் முன்னிறுத்துவதை பாஜகவிலேயே சிலர் விரும்பவில்லை. இதனால்தான் பாஜகவில் மோடிக்கு எதிராகவே வேலை செய்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இதனால்தான் மோடிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கிறார்கள், என்றெல்லாம் கூறப்பட்டது.
மகாராஷ்டிரா எழுச்சி: லோக்சபா தேர்தலில் பாஜக சரியவே இதுதான் காரணம் என்று கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஆர்எஸ்எஸ் தேர்தல் பணிகளை செய்தது. ஏற்கனவே ஹரியானா சட்டசபை தேர்தலிலும் ஆர்எஸ்எஸ் பணிகளை செய்தது அங்கே பாஜக வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
மாநில அளவில் பாஜக - ஆர்எஸ்எஸ் இடையே நிலவிய ஒருமைப்பாடு ஏற்பட்டது. இதனால் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்காக தேர்தல் பணிகளை செய்ததாக கூறப்படுகிறது. அங்கே உள்ளூர் அளவில் இரண்டு தரப்பிற்கும் மோதல் இல்லை. நல்ல இணக்கம் இருந்தது. மோடியை தாண்டி உள்ளூர் அளவில் ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே நட்பு இருந்தது. முக்கியமாக தேவேந்திர பட் நாவிஸ் - ஆர்எஸ்எஸ் இடையே இணக்கம் அதிக அளவில் இருந்தது.
முக்கியமாக உள்ளூர் அளவில் களப்பணிகளை, கிரவுன்டு வேலைகளை செய்ததாக கூறப்படுகிறது. இதுவே பாஜகவிற்கு சாதகமாக மாறி உள்ளது.. தேர்தல் களத்தில் கேம் சேஞ்சராக மாறியது என்றும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications