மிருக காட்சி சாலையில் புலிக்கு எத்தனை கிலோ, சிறுத்தைக்கு எவ்வளவு இறைச்சி தரப்படும்? சுவாரசிய தகவல்

பூங்காக்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் விலங்குகளால் வேட்டையாடி தனக்கான இரையை தேட முடியாது. இதனால், பூங்கா நிர்வாகமே இறைச்சியை கொடுத்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: காடுகளில் கம்பீரமாக சுற்றித்திரியும் சிங்கம் , புலி போன்ற வனவிலங்குகள் வேட்டையாடி தங்களுக்காக இரையை தேடிக்கொள்ளும். ஆனால், வனவிலங்கு பூங்காக்களில் அடைத்து வைத்து பராமரிக்கப்படும் விலங்குகளின் பசியாற எந்த மாதிரியான இரைகள் வழங்கப்படுகிறது.. எவ்வளவு வழங்கப்படும் என்று யோசித்து இருக்கிறீர்களா.. அதைப்பற்றிய சுவாரசிய தகவலை இங்கே பார்க்கலாம்.

காட்டில் கம்பீரமாக சுற்றித்திரியும் வன விலங்குகளை நாம் டிஸ்கவரி போன்ற வில்ட் லைப் சேனல்களில் பார்த்து இருப்போது.

அதிலும் சிங்கம், புலி போன்ற விலங்குகள் டிவிக்கள் பார்த்தால் கூட ஒரு வித அச்ச உணர்வையூட்டும் வகையில் இருக்கும். ஆக்ரோஷமாக இரை தேடி பாய்வதும் இரையை பிடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் அதை வைத்து விளையாடுவதுமாக இருக்கும்.

வண்டலூர் வனவிலங்கு பூங்கா

வண்டலூர் வனவிலங்கு பூங்கா

இத்தகைய வனவிலங்குகளை வனத்திற்குள் சென்று பார்ப்பது முடியாத காரியம். முடியாதது மட்டும் இல்லை ஆபத்தானதும் கூட. எனவே இத்தகைய குறையை போக்கவே வனவிலங்கு பூங்காக்களும் இருக்கின்றன. பல நூறு ஏக்கர்களில் உள்ள இந்த வனவிலங்கு பூங்காக்களில் சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் கூட வன விலங்கு பூங்கா நிர்வாகத்தால் பாராமரிக்கப்படுகின்றன. சென்னை வண்டலூரில் கூட வனவிலங்கு பூங்கா உள்ளது.

 பூங்கா நிர்வாகம்

பூங்கா நிர்வாகம்

இந்த பூங்காவிலும் சிங்க, புலி உள்ளிட்ட கொடிய மிருகங்களும் பராமாரிக்கப்பட்டு வருகின்றன. காட்டில் சுதந்திரமாக சுற்றித்திரியும் இந்த வன உயிரினங்கள் குறிப்பிட்ட ஒரு பரப்பளவுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. பூங்காக்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் விலங்குகளால் வேட்டையாடி தனக்கான இரையை தேட முடியாது. இதனால், பூங்கா நிர்வாகமே இறைச்சியை கொடுத்து வருகிறது.

ஆண்டுக்கு ரூ.40 லட்சம் இறைச்சிகள்

ஆண்டுக்கு ரூ.40 லட்சம் இறைச்சிகள்

இதற்காக பூங்கா நிர்வாகம் எவ்வளவு செலவிடும் என்ற விவரங்களை எல்லாம் நீங்கள் என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? சிங்கம், புலி, சிறுத்தைகள் போன்ற விலங்குகள் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் மதிப்புள்ள எருமை இறைச்சிகள் (water buffalo) கொடுக்கப்படுகிறதாம். மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள சஞ்சய் காந்தி நேஷனல் பார்க் (SGNP) இந்த தகவலை ஆர்.டி.ஐ பதிலில் அளித்துள்ளது. கடந்தந் 2018- முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் மட்டும்ஜ் ரூ.1.96 கோடிக்கு இறைச்சிகளை வாங்க மட்டும் சஞ்செய் காந்தி தேசிய வனவிலங்கு பூங்கா செலவிட்டுள்ளது.

18 சிறுத்தைகள், 2 சிங்கங்கள்

18 சிறுத்தைகள், 2 சிங்கங்கள்

இந்த பூங்காவில் தற்போது 6 வங்க புலிகள், 18 சிறுத்தைகள், இரண்டு சிங்கங்கள் உள்ளிட்டவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பராமரிக்கப்படும் ஊன் உண்னிகளுக்கு வாரத்தில் 6 நாட்கள் இறைச்சிகள் வழங்கப்படுகின்றன. ஒரு நாள் மட்டும் அதன் உடல் நல ஆரோக்கியத்திற்காக இறைச்சி கொடுக்கப்பட்டதாம். ஒரு கிலோ இறைச்சி ரூ. 149.30 க்கு சஞ்சய் காந்தி நேஷனல் பூங்கா வழங்கி வருகிறது. தினமும் 130 முதல் 140 கிலோ இறைச்சி சப்ளை செய்யப்படுகிறதாம்.

12 கிலோ எடை இறைச்சி

12 கிலோ எடை இறைச்சி

இதை வனவிலங்கு பூங்கா ஊழியர்கள் ஒவ்வொரு விலங்குகளின் உடல் எடை மற்றும் வயதை கருத்தில் கொண்டு தனியாக பிரித்து வைக்கிறார்கள். அதாவது இளம் வயது சிங்கங்களுக்கு 6 முதல் 7 கிலோ இறைச்சி கொடுக்கப்பட்டு வருகிறது. புலிகளுக்கு சராசரியாக 10 முதல் 12 கிலோ எடை கொண்ட இறைச்சி கொடுக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+