Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

20 வருடமாக கிடப்பில் கிடந்த.. மகாராஷ்டிரா கனவு திட்டம்! உள்ளே வரும் அதானி! பாஜக வென்றதால் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் தற்போது வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகள்.. அங்கே தாராவி முன்னேற்ற திட்டம் செயல்பாடுகள் திட்டத்திற்கு சாதகமாக மாறி உள்ளன. இது என்ன திட்டம்.. இதை பாஜக ஆதரிக்கவும்.. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கவும் என்ன காரணம் என்று இங்கே பார்க்கலாம். தேர்தல் முடிவுகள் காரணமாக இந்த திட்டம் மீண்டும் தடையின்றி உயிர்பெரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. அங்கே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும்.

election results 2024 maharashtra assembly election 2024 jharkhand assembly election 2024 by poll election 2024

மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை வெளியான முடிவுகளில் பாஜக கூட்டணி - பாஜக 147 இடங்கள், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 41, ஷிண்டே சிவசேனா - 55 இடங்களில் முன்னிலை. பாஜக கூட்டணி மொத்தமாக 232 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் கூட்டணி - காங்கிரஸ் 16, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - 10 இடங்கள், உத்தவ் தாக்கரே சிவசேனா 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக 51 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

போட்டி நிலவரம்: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 149 இடங்களில் போட்டியிட்டது. அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (ஷிண்டே பிரிவு) மற்றும் என்சிபி (அஜித் பவார் பிரிவு) ஆகியவை முறையே 81 மற்றும் 59 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

எதிர்க்கட்சிகள் தரப்பில், காங்கிரஸ் 101 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் என்சிபி (சரத் பவார் பிரிவு) முறையே 95 மற்றும் 86 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மேலும், 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) 17 இடங்களில் போட்டியிட்டது.

தாராவி:மகாராஷ்டிராவில் தற்போது வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகள்.. அங்கே தாராவி முன்னேற்ற திட்டம் செயல்பாடுகள் திட்டத்திற்கு சாதகமாக மாறி உள்ளன. தாராவி மும்பையின் மையப்பகுதியில் ஒரு குடிசை பகுதி ஆகும். இந்தியாவின் மிகவும் முன்னேறிய வணிக மாவட்டமான பாந்த்ரா-குர்லா அருகே அமைந்து உள்ளது. பல வளர்ந்த நிறுவனங்களுக்கு அருகே உள்ள குட்டி குடிசை பகுதி ஆகும் இது.

இந்த பகுதியை முன்னேற்றுவதற்காக கொண்டு வரப்பட்டதே தாராவி வளர்ச்சி திட்டம். 2004 ஆம் ஆண்டில், மகாராஷ்டிர மாநில அரசாங்கம் தாராவியை மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற உள்கட்டமைப்புகளுடன் கூடிய உயரமான கட்டிடங்கள், குடியிருப்புகளை அமைக்கும் வகையில் இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இதற்காக 68,000 பேரை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. முக்கியமாக குடிசை பகுதி மக்கள் இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

2004ல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கே உயரமான கட்டிடங்கள், வணிக வளாகங்கள் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு இங்கே வாழ்ந்தவர்கள்.. அதாவது இங்கே குடிசைப் பகுதிகள் இருந்ததற்கான ஆதாரத்துடன் குடியிருப்போருக்கு 300 சதுர அடி வீடுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 2000 முதல் 2011-ஆம் ஆண்டு வரை தாராவியில் குடியேறியவர்களுக்கு அவர்கள் குடியேறிய நிலத்தின் விலைக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடைசி வரை.. அதாவது 2024ல் இதற்காக டெண்டர் விடப்பட்டது வரை இந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

2004 ஆம் ஆண்டில், மகாராஷ்டிர அரசாங்கம் தாராவியை ஒருங்கிணைந்த திட்டமிடப்பட்ட நகரமாக மறுவடிவமைக்க முடிவு செய்தது. மறுசீரமைப்புக்கான செயல் திட்டத்திற்கு அரசு தீர்மானம் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. குடிசைப்பகுதி மறுவாழ்வு திட்டத்தின் அடிப்படையில் இந்த திட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ஆனால் மக்கள் எதிர்ப்பு, போதிய நிதி இல்லாமல் போனது என்ற சில காரணங்களால் திட்டம் தள்ளிப்போனது.

முதலில் விடுக்கப்பட்ட டெண்டர் செயலுக்கு வரும் நேரத்தில் இதன் மாஸ்டர் பிளான் மாற்றப்பட்டது. இதனால் 2011ல், அரசு அனைத்து டெண்டர்களையும் ரத்து செய்து, அரசு புதிய மாஸ்டர் பிளானை உருவாக்கியது. 2018 ஆம் ஆண்டில், மீண்டும் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனால் அதுவரை கொடுக்கப்பட்ட டெண்டர் நீக்கப்பட்டு மீண்டும் டெண்டர் விடப்பட்டது.

தாராவி மறுசீரமைப்புத் திட்டம் ஏன் செயல்படுத்தப்படவில்லை?:

நவம்பர் 2018 இல், அப்போதைய ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசாங்கம் தாராவி மறுமேம்பாட்டிற்கான புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. துபாயை தளமாகக் கொண்ட உள்கட்டமைப்பு நிறுவனமான செக்லிங்க் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் ஜனவரி 2019 இல் அதானிக்கு எதிராக வெற்றிகரமான ஏலத்தில் பங்கேற்றது ஏலத்தை வென்றது. ஆனால் தாராவி மறுவடிவமைப்பு திட்டத்தில் ரயில்வே நிலத்தை சேர்க்கும் முடிவைத் தொடர்ந்து டெண்டர் வழங்கப்படவில்லை.

அக்டோபர் 2020 இல், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி (எம்விஏ) அரசாங்கம் டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியது.
டெண்டரை ரத்து செய்வதற்கு ரயில்வே நிலத்தை மாற்றுவதில் மத்திய அரசு செய்த தாமதம் காரணமாக கூறப்பட்டது.

தாராவி டெண்டர் ஏலம்?:

தாராவி மறுவடிவமைப்பு திட்டத்திற்கான ஏலங்கள் நவம்பர் 2022 இன் இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டன, இந்த முறை அதானி குழுமம் அதிக ஏலதாரராக உருவெடுத்தது. தாராவி மறுசீரமைப்பு திட்டத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ்.வி.ஆர் ஸ்ரீனிவாஸ் வெளியிட்ட அறிக்கையில் கவுதம் அதானி தலைமையிலான குழுமம் ரூ. 5,069 ஏலத்தை சமர்ப்பித்துள்ளது, அதே நேரத்தில் டிஎல்எஃப் குழுமம் ரூ.2,025 கோடியை குறிப்பிட்டது. இறுதி ஏலத்தில் அதானி மற்றும் டிஎல்எஃப் மட்டுமே தகுதி பெற்றன. அதன்பின் அதானி நிறுவனம் இந்த ஏலத்தை வென்று பணிகளை தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆனால் தேர்தல் காரணமாகவும், மக்கள் எதிர்ப்பு காரணமாகவும் இந்த பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் தாராவி திட்டம் மூலம் பல லட்சம் குடும்பங்கள் வெளியேற்றப்படும். இதை தடை செய்வோம் அவர்கள் தற்போது இருக்கும் இடத்திலேயே பிரம்மாண்டமாக குடியிருப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். என்று மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (UBT) தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. தற்போது பாஜக வென்றதால் மீண்டும் அதானி குழுமம் இதே திட்டத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+