"பனியனுடன்" பாஜக புள்ளி.. லைவில் சிக்க வைத்து போலீசுக்கு போன பெண் நிர்வாகி.. பாய்ந்தது வழக்கு
பாஜக நிர்வாகி மீது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் தந்துள்ளார்
மும்பை: தன்னை பலமுறை வன்கொடுமை செய்ததாக, பெண் நிர்வாகி அளித்த புகாரின்பேரில், பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. இது மகாராஷ்டிர அரசியலில் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் தேஷ்முக்... இவர் ஒரு பாஜக மாவட்ட நிர்வாகி.. அந்த பகுதியில் மிகவும் பிரபலமானவரும்கூட.
இவர் நிர்மலா யாதவ் என்ற பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதி தந்துள்ளார்.. அந்த பெண்ணுக்கு 32 வயதாகிறது.. பாஜக நிர்வாகி என்பதால், இவர் சொன்னதை அந்த பெண்ணும் நம்பி உள்ளார்.

பாஜக நிர்வாகி
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, வேலை விஷயமாக பேச வேண்டும் என்று ஒரு ஹோட்டலுக்கு நேரில் வர சொல்லி உள்ளார் ஸ்ரீகாந்த்.. இந்த பெண்ணும் அங்கு சென்றுள்ளார்.. அப்போது, திடீரென பாலியல் வன்கொடுமை செய்துவிட்டாராம் ஸ்ரீகாந்த்.. இதனால் அதிர்ந்து போன அந்த பெண்,வன்கொடுமை செய்ததை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று எண்ணி, அதே ரூமில், ஃபேஸ்புக் பக்கத்தில், லைவ் வீடியோ பதிவிட்டார். வீடியோவில் கண்ணீருடன் பேசினார்.

கட்டிலில் ஸ்ரீகாந்த்
அந்த கட்டிலில், வெறும் பனியனுடன், அரைகுறை டிரஸ்ஸில் ஸ்ரீகாந்த் தேஷ்முக் உட்கார்ந்திருக்கிறார்.. இந்த பெண் அழுது கொண்டும் மூச்சுவாங்கி கொண்டும், கட்டிலின் மீது உட்கார்ந்துள்ள ஸ்ரீகாந்தை கைகாட்டி, குற்றம்சாட்டுகிறார்.. இதை பார்த்து பதறி போன ஸ்ரீகாந்த், உடனே ஓடி வந்து, செல்போனை தட்டிவிடுகிறார். சத்தம் போட்டு அந்த பெண்ணை திட்டுகிறார்.. இந்த நிகழ்வு முழுக்க அந்த வீடியோவில் பதிவாகி விட்டது.. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை கூட்டியது.

நிர்மலா
இந்த விவகாரம் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஸ்ரீகாந்த் தேஷ்முக் மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.. இதனால் ஆத்திரமும் அவமானமும் அடைந்த ஸ்ரீகாந்த், நேரடியாக போலீசுக்கு சென்று, சம்பந்தப்பட்ட பெண் நிர்மலா யாதவிற்கும், தனக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது என்றும், இந்தப் பெண் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார் என்றும் போலீசில் ஸ்ரீகாந்த் புகார் ஒன்றை தந்தார்.

நிஜம் என்ன?
ஸ்ரீகாந்த் தந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.. ஆனால், இப்போது, திடீரென பாதிக்கப்பட்ட பெண் நிர்மலா, ஸ்ரீகாந்த் தேஷ்முக் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.. அதில், திருமணம் செய்துகொள்வதாக சொல்லி, ஸ்ரீகாந்த் தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.. அந்த புகாரைத் தொடர்ந்து பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலாத்காரம்
அதேசமயம் சில சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.. வேலை வாங்கி தருவதாக சொன்னதை நம்பித்தான், ஸ்ரீகாந்த்தை தேடி சென்றதாகவும், அங்கே திடீரென தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் முதலில் பெண் தரப்பில் சொல்லப்பட்டது.. இப்போது திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, ஸ்ரீகாந்த் பலமுறை ஏமாற்றிவிட்டதாக புகார் தரப்பட்டுள்ளது.. அப்படியானால் இது எப்படி பாலியல் பலாத்காரம் ஆகும்? திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றியதால் புகார் தரப்பட்டுள்ளதா? அல்லது வேலை வாங்கி தராமல் பலாத்காரம் செய்துவிட்டதால் புகார் தரப்பட்டுள்ளதா?

உண்மை எது?
விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், தேசிய பாஜக தேர்தலுக்கு இப்போதே தயாராகி வரும் நிலையில், பாஜக நிர்வாகி மீது பொய் புகார் தரப்பட்டுள்ளதா? அல்லது அந்த பெண் நிஜமாகவே மோசடிக்கு ஆளானாரா? என்பதையெல்லாம் போலீசார்தான் விசாரித்து உண்மைத்தன்மையை வெளிக் கொணர வேண்டும் என்று பரவலான கருத்து எழுந்துள்ளது.
-
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை












Click it and Unblock the Notifications