Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சிக்கல் தீர்ந்தது".. மகாராஷ்டிராவில் 18 அமைச்சர்கள் பதவியேற்பு.. யாருக்கெல்லாம் பதவி தெரியுமா?

மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் இன்று செய்யப்படுவதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா அமைச்சரவை 40 நாட்களுக்குப் பிறகு, இன்று 18 அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்பியதுடன், இதையடுத்து, நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
தன்னுடைய தலைமையிலான ஆதரவு எம்எல்ஏக்கள் 40 பேருடன் சேர்ந்து பாஜகவுடன் கூட்டணியையும் அமைத்துக்கொண்டார்.

பட்னாவிஸ்

பட்னாவிஸ்

இதனால் இரண்டரை ஆண்டுகள் ஆட்சிபுரிந்த உத்தவ் தாக்கரே தலைமையில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனாவின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியையும் கைப்பற்றினார்.. தேவேந்திர பட்னாவிஸ் மட்டும் துணை முதல்வராகவும், மராட்டியத்தின் முதல்வராக ஷிண்டேவும் பதவியேற்றுக்கொண்டார்.. ஆனால், அவர்கள் 2 பேர் மட்டும்தான் இப்போதைய புதிய ஆட்சியில் பதவிகளை ஏற்றுள்ளனர்.

கிண்டல்கள்

கிண்டல்கள்

மற்றவர்கள் இன்னும் ஏற்கவில்ல.. ஆனால் ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிவிட்டதால், எப்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்ற கேள்வி பரவலாக எழுந்தபடியே இருந்தது.. ஒருகட்டத்தில் இதை விமர்சிக்கவும் தொடங்கி, கடைசியில் கேலி கிண்டல் வரை சென்றுவிட்டது.. இன்னும் 2, 3 நாட்களுக்குள் அமைச்சரவையை விரிவாக்கம் செய்துவிடுவேன் என்று ஷிண்டே, 10 நாட்களுக்கு முன்பேயே சொன்னார்.. ஆனால், அமைச்சரவை விரிவாக்கம் இதுவரை நடக்கவில்லை..

ஷிண்டே பிடிவாதம்

ஷிண்டே பிடிவாதம்

இதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.. கூட்டணிக்குள் இப்பவே கண்ணை கட்டுதே, குளறுபடி வந்துவிட்டதே என்று விமர்சித்தன.. ஆனால், இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏன் தாமதம் என்ற தகவல்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருந்தது.. அம்மாநில நீர்வளத்துறையை கைப்பற்றுவதில் பாஜக பிடிவாதமாக இருந்ததாகவும் சொல்லலப்பட்டது. அதேபோல, நிதித்துறை தங்களுக்கு வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே அணியினரின் பிடிவாதமாக இருப்பதாக சொன்னார்கள். இப்படி எந்த துறையை யாருக்கு ஒப்படைப்பது என்பதுதான், காலதாமதத்துக்கு காரணம் என்று தகவல்கள் வந்தன.

பாஜக

பாஜக

அநேகமாக, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு உள்துறை அமைச்சகமும் ஒதுக்கப்படும் என்றார்கள்.. இன்னொன்றும் சொல்லப்பட்டு வந்தது.. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி வைத்திருந்த துறைகளை பாஜகவுக்கும், சிவசேனா தன்பிடியில் வைத்திருந்த துறைகளை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கும் கொடுத்துவிடலாம் என்றும் திட்டம் இருந்ததாம். இந்த முடிவை இரு தரப்பிலுமே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், ஆனால், ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள 30 எம்எல்ஏக்களும் தங்களுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று விடாப்பிடியாக இருப்பதாக கூறப்பட்டது.

சாதிக்கும் பாஜக

சாதிக்கும் பாஜக

ஒருவழியாக இந்த குழப்பங்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின.. அதன்படி, இன்றைய தினம் காலை 11 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.. மகாராஷ்டிரா அமைச்சரவை 40 நாட்களுக்குப் பிறகு, இன்று 18 அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 13 பேர்

13 பேர்

பாஜகவில் இருந்து சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முங்கதிவர், கிரீஸ் மஹாஜன், சுரேஷ் காடே, ராதாகிருஷ்ண விகே பாட்டீல், ரவீந்திர சவ்ஹான், மங்கள் பிரபாத் லோதா, விஜயகுமார் காவித், அதுல் சாவே ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அமைச்சராக இன்று பதவியேற்று இருக்கும் சந்திரகாந்த் பாட்டீல் மகாராஷ்டிரா மாநிலத்தின் பாஜக தலைவராக உள்ளார்..

Recommended Video

    Operation Thamarai | கடுப்பான Bihar CM Nithish Kumar*Politics
     பதவிப்பிரமாணம்

    பதவிப்பிரமாணம்

    ஏக்நாத் ஷிண்டே அணியில் இருந்து தாதா பூஷே, சாம்புராஜே தேசாய், சந்தீபன் பூம்ரே, உத்ய சாமந்த், தனசி சாவந்த், அப்துல் சத்தார், தீபக் கேசர்கர், குலாப்ராவ் பாட்டீல், சஞ்சய் ரதவுட் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்... இந்த பதவியேற்பு மூலம், ஒரு மாத குழப்பம் இன்றைய தினம் முடிவுக்கு வந்தது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+