கணவனின் கசமுசா உறவு.. பாடாய் படுத்திய காதலி.. கோர்ட்டுக்கு ஓடிய மனைவி.. நீதிபதி என்ன சொன்னார் பாருங்க
மும்பை: கணவரின் காதலியால், அளவுக்கு அதிகமாகவே நொந்துபோய் விட்டார் மனைவி.. இதனால், மன உளைச்சல் அதிகமாகி, தனக்கு நீதி வேண்டும் என்று கேட்டு கோர்ட்டுக்கு ஓடினார்.. அப்போது நீதிமன்றம் என்ன சொன்னது தெரியுமா?
நம்முடைய நாட்டை பொறுத்தவரையில் திருமணம் மீறிய உறவு என்பது குற்றமாக கருதப்பட்டு வந்தது... அந்தவகையில், ஐபிசி பிரிவு 497-ன்படி அதிகபட்சமாக 5 வருட சிறைத்தண்டனை, அபராதம் என்றெல்லாம் விதிக்கப்பட்டு வந்தது.

சுப்ரீம்கோர்ட்: ஆனால், கடந்த 2018ல், கேரளாவைச் சேர்ந்த ஜோசப் ஷைன் என்பவர் இதனை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் புதிய தீர்ப்பினை நீதிபதிகள் வழங்கியிருந்தனர்.
அதன்படி, திருமணம் மீறிய உறவு குற்றம் கிடையாது" என்று தீர்ப்பளித்தது... அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, "திருமணத்தை மீறிய உறவு சிவில் குற்றமாக இருக்கலாம். ஆனால் அது கிரிமினல் குற்றமாக இருக்க முடியாது. பெண்களின் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமையில் 497-வது சட்டப்பிரிவு தலையிடுகிறது. கணவர் என்பவர் பெண்களின் எஜமானர் கிடையாது. அதனால், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497 ரத்து செய்யப்படுகிறது" என்றார்.
திருமணம் மீறிய உறவு: இதையடுத்து, "திருமணம் மீறிய உறவு குற்றம் அல்ல" என்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.. இப்படிப்பட்ட சூழலில், சமீபத்தில், திருமணம் மீறிய உறவை குற்றமாக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு பரிந்துரை செய்திருந்தது.
அதில், "திருமணம் மீறிய உறவை குற்றமாக்க வகை செய்யும் சட்டப்பிரிவை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும்... காரணம், திருமண உறவு என்பது புனிதமானது. அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. திருமணம் மீறிய உறவு குற்றமாக்கப்படும்போது, ஆண் மற்றும் பெண் என்ற பேதமின்றி இருவருக்கும் அந்த சட்டம் நடுநிலையாக இருந்து தண்டனை வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும், குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட வேண்டும்! என்று நாடாளுமன்ற எம்பிக்கள் குழு பரிந்துரைத்திருந்தது நினைவிருக்கலாம்.
மன உளைச்சல்: இப்படிப்பட்ட சூழலில், மும்பையில் ஒரு பெண், கணவரின் காதலியால் நொந்துபோய், கோர்ட் வாசலை மிதித்துள்ளார்.. கணவரின் காதலியால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னுடைய கணவரின் காதலிக்கு தண்டனையை வழங்க வேண்டும் என்றும் கூறி, அந்த மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பொதுவாக, ஒரு பெண், தன்னுடைய கணவரின் உறவினரால் குடும்ப வன்முறைக்கு ஆளானால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டம் 498A வலியுறுத்துகிறது.. எனவே, பாதிக்கப்பட்ட மனைவியும், குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், தன்னுடைய வழக்கினை தொடர்ந்தார்.
ஹைகோர்ட்: இந்த வழக்கு நேற்று மும்பை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிமன்றம், "கணவரின் காதலி உங்களுக்கு எந்த விதத்திலும் உறவினர் இல்லை.. கணவரின் சட்டத்திற்கு புறம்பான உறவு என்பதால் இந்த குற்றப்பத்திரிகையே சட்டவிரோதமானது.. கணவரின் உறவினர் உங்களுக்கு மன உளைச்சல் தந்தால் தண்டிக்கலாம்.. ஆனால் கணவரின் காதலி என்பது உங்களுக்கு உறவினர் கிடையாது" என்று தீர்ப்பு கூறிய நீதிபதி, அந்த பெண் தொடர்ந்த வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி கோர்ட்டுக்கு ஓடினார்.. இப்போது நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டதால், இன்னும் நொந்து போயிருக்கிறாராம்..!!












Click it and Unblock the Notifications