வாக்கிடாக்கியில் வந்த சத்தம்.. கஞ்சா சுற்றி தந்தேன்.. சுஷாந்த் மரணம்.. வேலைக்காரர் பகீர் வாக்குமூலம்
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங்கின் மர்ம மரணம் குறித்து அவரின் வீட்டு வேலைக்காரர் நீரஜ் சிங் கொடுத்த வாக்குமூலம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவிற்கு வரவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, யாரவது அவரை தற்கொலை செய்ய தூண்டினார்களா, அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
இது தொடர்பாக நிறைய சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளது . கடந்த ஜூன் 14ம் தேதி தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். முதல் நாள் நண்பர்களுடன் பார்டி கொண்டாடியவர், மறுநாளே இரவோடு இரவாக தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்காரர் பேட்டி
இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் மர்ம மரணம் குறித்து அவரின் வீட்டு வேலைக்காரர் நீரஜ் சிங் முக்கியமான சில விஷயங்களை தெரிவித்து இருக்கிறார். சுஷாந்த் சிங் இறக்கும் முன் இரண்டு நாட்கள் என்ன நடந்தது என்று தெரிவித்துள்ளார். அதில் சுஷாந்த் சிங் எப்போதும் தனது அறை கதவை சாத்தவே மாட்டார். எப்போதும் இரவு நேரத்தில் தண்ணீர் குடிக்க கூப்பிடுவார்.

வாக்கி டாக்கி
பின் ஒருநாள் எங்களுக்கு அவர் வாக்கி டாக்கி வாங்கி கொடுத்தார். இனிமேல் எது பேச வேண்டும் என்றாலும் வாக்கி டாக்கி மூலம் பேசுங்கள் என்று கூறினார். நாங்களும் வீட்டு வேலை உத்தரவுகளை வாக்கி டாக்கி மூலம் பேசினோம். அப்படித்தான் ஒருநாள் திகில் சம்பவம் ஒன்று நடந்தது. நான் தோட்டத்தில் காவலுக்கு நின்றேன். வாக்கி டாக்கியில் பேசிய சுஷாந்த் சிங் என்னிடம், அவரின் அறை லைட்டை அணைக்க வேண்டும் என்று கூறினார்.

அச்சம் வந்தது
வாக்கி டாக்கியில் அவர் சொன்னதை கேட்டு அவரின் அறைக்கு சென்றேன். ஆனால் அங்கு சுஷாந்த் சிங் தூங்கி கொண்டு இருந்தார். லைட்டும் அணைந்து இருந்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. மறுநாளும் இதேபோல் ஒரு குரல் என்னிடம் விளக்கை அணைக்கும்படி சொன்னது. அதேபோல் அன்றும் விளக்கு அவரின் அறையில் அணைந்தே இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு சந்தேகம் வந்துவிட்டது.

பெறிய சந்தேகம்
என்னிடம் யார் அப்படி பேசியது என்று சந்தேகம் எழுந்தது. அன்று இரவு முழுக்க எனக்கு தூக்கமே வரவில்லை. அதன்பின் ஜூன் 12ம் தேதி சுஷாந்த் சிங் பெட்டி நிறைய கஞ்சா வாங்கி வந்தார். என்னிடம் அதை சுற்றி தரும்படி கூறினார். நான் அதை சிகரெட்டில் சுற்றி அவருக்கு கொடுத்தேன். பெட்டியில் நிறைய கஞ்சா இருந்தது.அதன்பின் 13ம் தேதி அவர் கஞ்சா அடிக்கவில்லை.

சந்தேக மரணம்
அதன்பின் 14ம் தேதி எழுந்து காலையில் என்னை பார்த்து சிரித்தார். அதன்பின் ஜூஸ் குடித்தார். பின் அறைக்கு உள்ளே சென்றவர், வெளியே வரவில்லை. 11 மணி தாண்டியும் அவர் வெளியே வரவில்லை. சந்தேகம் வந்து, அதன்பின் போலீஸ் வந்து பூட்டை உடைத்தது. உள்ளே அவர் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தார். அவரின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை.

காரணம் தெரியவில்லை
அன்று காலை எங்களிடம் அவர் நன்றாக பேசினார். அந்த கஞ்சா பெட்டி அவர் இறந்த அன்று காலியாக இருந்தது. ஒரே இரவில் யாரும் இவ்வளவு கஞ்சா அடிக்க முடியாது. அந்த பெட்டியில் இருந்த கஞ்சா எங்கே சென்றது என்று தெரியவில்லை. இது இன்னும் மர்மமாக இருக்கிறது. அன்று வாக்கி டாக்கியில் பேசியதும் யார் என்று தெரியவில்லை என்று, சுஷாந்த் சிங் வீட்டு வேலைக்காரர் நீரஜ் சிங் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications