"என்னை விட்டுருங்க.." விமானப்படை வீரரின் மனைவி பலாத்காரம்.. கட்டாயப்படுத்தி மதமாற்றம்! பகீர் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் இந்திய விமானப்படை அதிகாரியின் மனைவிக்கு நேர்ந்த கொடூரமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் எனப் பல குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசார் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக இருவர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், இந்திய விமானப்படை வீரர் ஒருவரின் மனைவிக்கு நேர்ந்த மிக மோசமான கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது பழைய பள்ளித் தோழன் தன்னை ஏமாற்றி, பலாத்காரம் செய்து, சூனியம் மற்றும் மிரட்டல் மூலம் கட்டாய மதமாற்றம் செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.

IAF Officer Wife Assault Forced Conversion

என்ன நடந்தது!

இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பெயரில் அயாஸ் மாதரே மற்றும் அவரது நண்பர் அமீன் ஷேக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த மதமாற்றச் சடங்கைச் செய்த மௌலானா என்பவரைத் தேடி தனிப்படை போலீசார் மத்தியப் பிரதேசத்திற்குச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அதில் 24 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "என்னை விட்டுவிடுங்கள்" என்று கதறி அழுகிறார். ஆனால், அய்யாஸ் தாஜ் மதாரே (26) என்ற இளைஞன் அந்தப் பெண்ணின் கைகளை வலுக்கட்டாயமாகப் பிடித்துக்கொண்டு, சில மந்திரங்களைச் சொல்கிறார். அந்தப் பெண் அவரிடமிருந்து தப்பிக்கப் போராடுவது அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோவே தற்போது இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.

ஜீஸில் மயக்க மருந்து

பாதிக்கப்பட்ட 24 வயது பெண், நாக்பூரில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக இருந்து வருகிறார். இவரது கணவர் இந்திய விமானப்படையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது வேறொரு நகரத்தில் பணியில் உள்ளார். கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அந்தப் பெண்ணின் முன்னாள் வகுப்புத் தோழனான அய்யாஸ் தாஜ் மதாரே, நிலம் வாங்குவது தொடர்பாகப் பேச வேண்டும் என்று கூறி, வார்தா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அந்தப் பெண்ணை அழைத்துள்ளார்.

அங்கு அந்தப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஜூஸில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மயக்கமடைந்த நிலையில், அய்யாஸ் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார். அந்த ஆபாச வீடியோக்களைக் காட்டி அய்யாஸ், அந்தப் பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளான். வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று பயமுறுத்தி, பலமுறை அவரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், அவரிடமிருந்து சுமார் 3.09 லட்சம் ரூபாய் பணத்தையும் பறித்துள்ளான்.

மதமாற்றம்

இதற்கிடையில், அந்தப் பெண்ணை இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி அய்யாஸ் வற்புறுத்தியுள்ளான். கடந்த மே மாதம், நாக்பூரின் கல்மேஷ்வர் பகுதிக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று, அமீன் ஷேக் (30) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹஸ்ரத் மௌலானா ஆகியோரிடம் அறிமுகப்படுத்தியுள்ளான்.

அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து, அந்தப் பெண்ணுக்குச் சில மதச் சடங்குகளைச் செய்துள்ளனர். "உனது மதமாற்றம் முடிந்துவிட்டது, இப்போது நீ அய்யாஸின் மனைவி" என்று அவர்கள் கூறியுள்ளனர். இப்போது பரவும் வீடியோவில் இருப்பது இந்தச் சடங்குகள்தான் என்று போலீசார் உறுதி செய்துள்ளனர். அதன் பிறகு மீண்டும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி நடந்துள்ளது.

போலீஸ் நடவடிக்கை

திருமணமான பெண் என்பதால், பயம் மற்றும் அவமானம் காரணமாக இந்தப் பெண் இவ்வளவு காலம் அமைதியாக இருந்துள்ளார். ஆனால், சமீபத்தில் அவரது கணவர் பணி முடிந்து வீடு திரும்பியபோது, தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறியுள்ளார். அவரது கணவர் அளித்த தைரியத்தைத் தொடர்ந்தே அவர்கள் ஜூன் 13 அன்று நாக்பூர் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாகப் புகாரளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், அய்யாஸ் தாஜ் மதாரே மற்றும் அமீன் ஷேக் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஹஸ்ரத் மௌலானாவைத் தேடி வருகின்றனர். அவர்கள் மீது பலாத்காரம் , மிரட்டிப் பணம் பறித்தல், கட்டாய மதமாற்ற முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+