நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே.. உங்களால் முடிந்தால் இதை பண்ணுங்க! ஆதித்ய தாக்கரே ஒபன் சேலன்ஞ்
மும்பை: மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் தொடரும் நிலையில், இது குறித்து அம்மாநில அமைச்சர் ஆதித்ய தாக்கரே சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா- என்சிபி-காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. மூன்று ஆண்டுகள் இந்த கூட்டணி ஆட்சி சுமுகமாகவே சென்று கொண்டு இருந்தது.
இருப்பினும், சமீப காலமாக இந்தக் கூட்டணி ஆட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது அத்தனையும் தொடங்கி வைத்தவர் சிவசேனா மூத்த அமைச்சர் ஷிண்டே!

ஏக்நாத் ஷிண்டே
அதிருப்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் இப்போது அசாம் மாநிலத்தில் இருக்கும் ஹோட்டலில் உள்ளார். முதலில் 16 எம்எல்ஏக்கள் மட்டுமே ஷிண்டே ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், அது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இப்போது சுமார் 40 எம்எல்ஏக்கள் ஷிண்டே ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மைனாரிட்டி அரசு
சில நாட்களுக்கு முன்பு வரை பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை உடன் இருந்த உத்தவ் தாக்கரே அரசு, இப்போது சொந்த கட்சி எம்எல்ஏக்களால் மைனாரிட்டி அரசாக மாறிப் போயுள்ளது. ஒட்டுமொத்த கட்சியும் தனது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருந்த தாக்கரேவுக்கு இது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் உத்தவ் தாக்கரே, தனது ராஜினாமா கடித்ததை அதிருப்தி எம்எல்ஏக்களே ஆளுநரிடம் கொடுத்துவிடலாம் என்றார்.

சிவசேனா
அதிருப்தியாளர்களை அமைதிப்படுத்தும் நடவடிக்கை ஒரு புறம் நடந்து வரும் அதே வேலையில், சிவசேனா தலைவர்கள் அதிருப்தியாளர்களை நோக்கி கடும் விமர்சனங்களை முன் வைப்பதையும் விட்டுவிடுவதில்லை. இதனிடையே அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தைரியம் இருந்தால் கட்சியில் இருந்து விலகித் தேர்தலைச் சந்திக்கட்டும் என்று ஆதித்யா தாக்கரே சவால் விடுத்துள்ளார்.

தைரியம் இருந்தால்
இது குறித்து அவர் பேசுகையில், "உங்களுக்குத் தைரியம் இருந்தால், சிவசேனாவை விட்டு வெளியேறுங்கள். நாங்கள் செய்தது தவறு என்று நீங்கள் நினைத்தால், உத்தவ் தாக்கரேவின் தலைமை தவறு. நாங்கள் அனைவரும் தவறு என்று தானே பொருள். அப்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலைச் சந்தியுங்கள். அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். மக்கள் எங்களுடன் இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.

மக்கள் ஆதரவு
அவர்களால் (அதிருப்தி எம்எல்ஏக்கள்) இங்கு மகாராஷ்டிராவில் பிரச்சாரம் செய்ய முடியாது. இந்த நெருக்கடியை உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான போர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் செய்த துரோகத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம். இந்த சதியை முறியடித்து நிச்சயம் வெற்றி பெறும்" என்றும் அவர் தெரிவித்தார்.

கோரிக்கை
ஷிண்டே ஆதரவாளர்கள் முதலில் எவ்வித கோரிக்கையும் வைக்காமல் இருந்தனர். அதன் பின்னர் என்சிபி மற்றும் காங்கிரஸ் கூட்டணி முரணானது என்று குறிப்பிட்ட அவர்கள், உடனடியாக கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். என்சிபி மற்றும் காங்கிரஸ் கூட்டணி தரப்பில் இருந்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications