திருமணத்துக்கு சேர்த்து வைத்த பணத்தில்... ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஆட்டோ ஓட்டுநர்
மும்பை: புனேவில் திருமணச் செலவுக்காக சேர்த்து வைத்த ரூ.2 லட்சத்தை ஏழை எளியோர் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக செலவிட்டுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.
புனேவை சேர்ந்த அக்ஷய் கொத்வாலே என்பவர் சொந்தமாக ஆட்டோ வைத்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார். இவரது திருமணம் வரும் 25-ம் தேதி நடைபெற இருந்த நிலையில், லாக்டவுன் காரணமாக அதனை தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் தனது திருமணச் செலவுக்காக ஆட்டோ ஓட்டி சேர்த்து வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாயை ஏழைகளின் பசிப்பிணி தீர்க்க செலவழித்துள்ளார் இந்த பெரிய மனசுக்காரர்.

லாக்டவுனால் தெருவோரம் வசிப்பவர்களும், புலம் பெயர் தொழிலாளர்களும் உணவுக்கு மிகுந்த சிரமப்படுவதை பார்த்த இவர், தினமும் 400 பேருக்கு சப்பாத்தியும், சாதமும் வழங்கியுள்ளார். நண்பர்கள் உதவியுடன் தினமும் தயார் செய்து அதனை எடுத்துச்சென்று விநியோகம் செய்திருக்கிறார். சாமனியரான ஆட்டோ ஓட்டுநரின் உள்ளத்தில் உயர்ந்த எண்ணம் இருப்பதை அறிந்த புனே மாநகராட்சி அதிகாரிகள் அக்ஷய் கொத்வாலேவை அழைத்து பாராட்டி சிறப்பித்துள்ளனர்.
தனது வருங்கால மனைவியின் ஒப்புதலுடன் திருமணத்துக்கு சேர்த்து வைத்த தொகையை ஏழைகளுக்கு உதவ பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார் இவர். மேலும், உணவு வழங்குவதோடு மட்டுமல்லாமல் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது ஆட்டோவில் ஒலிப்பெருக்கியை கட்டிக்கொண்டு பரப்புரையிலும் ஈடுபடுகிறார்.
இதேபோல் லாக்டவுன் காலத்தில் பெரும்பாலானோர் வருமானம் இல்லாமல் இருப்பதால், கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தனது ஆட்டோவில் கட்டணம் ஏதும் இவர் வாங்குவதில்லை. லாக்டவுன் முடியும் வரை தன்னால் இயன்ற உதவிகளை சமூகத்திற்கு செய்வேன் என உறுதிப்படக் கூறுகிறார் உள்ளத்தால் உயர்ந்த இந்த மனிதர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications