அட கொடுமையே.. அப்பா தாத்தா அண்ணா.. சிறுமியை வீட்டுக்குள்ளே வைத்து சிதைத்த கொடூரம்.. அதுவும் 5 வருஷமா
மும்பை : மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த ஐந்து வருடங்களாக 11 வய்துடைய சிறுமியை தனித்தனியே அவரது அப்பா, தாத்தா, அண்ணன், மாமா என ஒரு குடும்பமே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
குறிப்பாக வட மாநிலங்களான பீகார் மத்திய பிரதேசம் உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு குறிப்பாக 18 வயதுடைய சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகிறது.

பாலியல் வன்கொடுமை
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்வேறு சட்டங்களையும் திட்டங்களையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தாலும் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் சிறுமிகளுக்கு ஏற்படும் கொடூரங்கள் செய்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த ஐந்து வருடங்களாக 11 வய்துடைய சிறுமியை தனித்தனியே அவரது அப்பா, தாத்தா, அண்ணன், மாமா என ஒரு குடும்பமே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் அதிர்ச்சி
பீகாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குடும்பத்தினர் தற்போது மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வசித்து வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு பீகார் அந்த குடும்பம் வசித்தபோது குடும்பத் தலைவரான தந்தை தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கினார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. பள்ளியில் நடைபெற்ற குட் டச் பேட் டச் நிகழ்ச்சியின்போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த மாணவி ஆசிரியரிடம் தெரிவித்ததையடுத்து இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த கொடுமை தனது தந்தையின் மூலம் தனக்கு நடந்து வருவதாக அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

11 வயது சிறுமி
இதையடுத்து சிறுமியை தனியாக அழைத்து சென்று விசாரித்தபோது, தற்போது 11 வயதாகும் சிறுமியின் சகோதரர் மற்றும் 45 வயதான தந்தை மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376ன் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், புனேவில் உள்ள காவல் நிலையத்தில் அவரது தாத்தா (வயது சுமார் 60) மற்றும் மாமா (சுமார் 25 வயது) ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் மூத்த சகோதரர் நவம்பர் 2020இல் அவளை பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கினார். அவளது தாத்தாவும் தூரத்து மாமாவும் சிறுமியை தகாத முறையில் தொடுவது வழக்கமாக் கொண்டிருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

வழக்கு பதிவு
அனைத்து சம்பவங்களும் தனித்தனியாக நடந்ததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் தங்களது கொடூர செயல் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள் எனவும், இது கூட்டு பலாத்கார வழக்கு அல்ல என்று போலீசார் கூறியுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் பலாத்காரத்துக்காக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications