பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம்.. உணவு டெலிவரி செய்தபோது சொமோட்டோ ஊழியருக்கு சபலம்.. "மாமா" மாதிரியாம்
இளம்பெண்ணுக்கு முத்தம் தந்துள்ளார் சொமேட்டோ உணவு டெலிவரி ஊழியர்
மும்பை: உணவு டெலிவரி செய்ய சென்ற ஊழியர் ஒருவர், இளம்பெண்ணுக்கு முத்தம் தந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. என்ன நடந்தது என்று பாருங்கள்.
பல முன்னணி நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் காலம் நேரம் பாராமல் வேலை பார்ப்பவர்கள்.. கடும் வெயில், மழையை பாராமல் உழைப்பவர்கள்.. இதைவிட பெரிய சிக்கல் டிராஃபிக் ஜாம்.
இந்த டிராபிக்கில் இவர்கள் சிக்கி படாதபாடுபட்டுதான் உணவை கொண்டு போய் உரியவர்களிடம் சேர்க்கிறார்கள்..

சோமேட்டா
ஆனால் வீட்டில் இருந்து கொண்டு ஆர்டரை பெறும் வாடிக்கையாளர்கள் சிலர், இதையே பிரச்சனையாக்கி விடுவதும் உண்டு.. ஏதாவது ஒரு காரணங்களுக்காக அவர்களை திட்டுவதும், காயப்படுத்துவதுமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.. சில நாட்களுக்கு பிரபல சோமேட்டா ஊழியர் ஒருவரை பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து, செருப்பால் அடிக்கும் வீடியோவும் இணையத்தில் பரவியது.. இதை பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள், அந்த ஊழியருக்குதான் தங்கள் ஆதரவை வழங்கினர்.

டெலிவரி
அந்தவகையில், உணவு டெலிவரி செய்யும் நபர்கள் நிறைய இடர்பாடுகளை சந்தித்து வந்தாலும், ஒருசில ஊழியர்கள் வரம்பு மீறி நடந்து கொள்வதும் உண்டு.. இங்கும் அப்படித்தான் ஒருசம்பவம் நடந்துள்ளது.. மராட்டிய மாநிலம் புனேவின் யெவலேவாடி பகுதியில் கடந்த 17 ந்தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த பெண்ணுக்கு 19 வயதிருக்கும்.. சோமாட்டோ மூலம் சாப்பாடு ஆர்டர் தந்துள்ளார்.. இரவு 9.30 மணியளவில், சோமாட்டோ டெலிவரி ஊழியர் ரயீஸ் ஷேக் என்பவர் உணவு டெலிவரி செய்ய சென்றிருக்கிறார்.. ஷேக்கிற்கு 40 வயதாகிறது..

தேங்க்ஸ்
அந்த இளம்பெண்ணுக்கு உணவை டெலிவரி செய்துள்ளார்.. பிறகு, தேங்க்ஸ் என சொல்லிவிட்டு, டக்கென அந்த பெண்ணின் கன்னத்தில் வலுக்கட்டாயமாக 2 முறை முத்தமிட்டுள்ளார்.. பிறகு அவரிடம் தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார்.. அந்த பெண்ணும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததும், மறுபடியும் அவரை இழுத்து கட்டிப்பிடித்து துன்புறுத்தி உள்ளார்... இதனால் அப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்..

மாமா
உடனே ஷேக், "நான் உனக்கு மாமா மாதிரி.. உனக்கு ஏதாவது வேண்டுமானால் என்னிடம் கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.. அதற்கு பிறகும் விடாமல், மறுபடியும் ஒரு கிளாஸ் தண்ணீர் வேண்டும் என்று கேட்டு துன்புறுத்தியிருக்கிறார்.. அப்போது அந்த பெண் அலறி சத்தம் போடவும், ஷேக் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார்.. ஆனால் வீட்டுவசதி சங்கத்தை சேர்ந்த சிலர் அவரை விரட்டி, சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர்.. போலீசிலும் ஒப்படைத்தனர்... இப்போது ஷேக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications