மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீடு சக்சஸ்.. ‛இந்தியா’ கூட்டணியில் யாருக்கு எத்தனை இடங்கள்? முழு விபரம்
மும்பை: மகாராஷ்டிராவில் நீண்ட இழுபறிக்கு பிறகு ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்தி எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. மகாராஷ்டிராவை பொறுத்தமட்டில் ‛இந்தியா' கூட்டணியில் சிவசேனா உத்தவ் அணி, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்பவார் அணி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.

இந்த 3 கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு செய்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தான் வெற்றிகரமாக தொகுதி பங்கீடு நடந்து முடிந்துள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 21 இடங்களில் சிவசேனா உத்தவ் அணி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதேபோல் மீதமுள்ள 10 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணி போட்டியிடுகிறது.
மகாராஷ்டிரா என்பது முக்கிய மாநிலமாக உள்ளது. இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்துக்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிரா தான் உள்ளது. இங்கு ‛இந்தியா' கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டால் அது பாஜகவுக்கு சாதகமாகிவிடும். இத்தகைய சூழலில் தான் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ், சிவசேனா உத்தவ் அணி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணியினர் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவை பொறுத்தமட்டில் மொத்தம் 5 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி ஏப்ரல் 19, ஏப்ரல் 16, மே 7, மே 13, மே 20 ஆகிய தேதிகளில் மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications