இந்தியாவுக்கு இப்போது 2 தேசத் தந்தைகளாமாம்.. யார் யாருன்னு தெரியுமா? அம்ருதா சொல்றதை கேளுங்க!
மும்பை: மகாத்மா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி என இந்தியாவுக்கு இப்போது இரண்டு தேசத் தந்தைகள் இருக்கிறார்கள் என மகாராஷ்ட்ரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அம்ருதா பட்னாவிஸின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நாட்டின் விடுதலைக்காகவும், ஏழை மக்களுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த மகாத்மா காந்தியடிகளுடன் மோடியை ஒப்பிட்டதன் மூலம் காந்திக்கு மிகப்பெரிய களங்கத்தை அம்ருதா ஏற்படுத்தி இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்கு பெயர்போன அம்ருதா
மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவியான அம்ருதா பட்னாவிஸ், ஒரு தனியார் வங்கியில் உயர்ந்த பதவியை வகித்து வருகிறார். நேரடியாக அரசியல் களத்தில் இல்லாத போதிலும், அவ்வப்போது அரசியல் தொடர்பான காட்டமான விமர்சனங்களை வைத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் அம்ருதா. சமீபத்தில் கூட, மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை 'சூனியக்கார ராஜா' எனப் பொருள்படும் வகையில் மிக மோசமாக அவர் விமர்சித்திருந்தார். பின்னர் அவரது கருத்துக்கு எதிர்ப்பு அதிகரிக்கவே, அந்த விமர்சனத்தை தனது ட்விட்டரில் இருந்து நீக்கினார் அம்ருதா.

'ஒய் பிளஸ்' பாதுகாப்பு
இருந்தபோதிலும், அம்ருதாவுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் பலர் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்ததும், துணை முதல்வராகவும், உள்துறை அமைச்சராகவும் பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் தனது மனைவிக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பை வழங்க ஏற்பாடு செய்தார். முதலில் எக்ஸ் பிரிவு பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பாதுகாப்பு இப்போது தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அத்துடன், அம்ருதா வெளியில் செல்லும்போது அவரது வாகனத்தின் முன்பு வேறு வாகனங்கள் குறுக்கிடக் கூடாது என்பதற்காக வாகனங்களை ஒதுங்குபடுத்தும் பிரத்யேக வாகனமும் வழங்கப்பட்டிருக்கிறது.

தேசத்தந்தை மோடி
பொதுவாக, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வாகனம், அரசாங்கப் பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் நிலையில், அம்ருதாவுக்கு இந்த வாகனம் கொடுக்கப்பட்டது பெரும் விமர்சனங்களுக்கு வித்திட்டது. இந்நிலையில், நாக்பூரில் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்ருதா கலந்துகொண்டார். அப்போது அவர், இந்தியாவின் தேசத்தந்தை மோடி எனக் கூறினார்.

இரண்டு தேசத் தந்தைகள்..
அம்ருதா இப்படி கூறியதும் அங்கிருந்த எழுத்தாளர்கள் குறுக்கிட்டு, "நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? மோடி தேசத்தந்தை என்றால் மகாத்மா காந்தி யார்?" எனக் கேள்வியெழுப்பினர். திடீரென இப்படி கேள்விக் கேட்டதும் திணறிய அம்ருதா, பின்னர் சுதாரித்துக் கொண்டு, "இந்தியாவுக்கு 2 தேசத் தந்தைகள் இருக்கின்றனர். முந்தைய இந்தியாவுக்கு காந்தியடிகள் தேசத் தந்தையாக இருந்தார். இன்றைய புதிய இந்தியாவின் தேசத் தந்தையாக நரேந்திர மோடி இருக்கிறார்" எனக் கூறினார். அம்ருதாவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications