மும்பை கடல்பகுதியில் 3 எண்ணெய் கப்பல்களை பறிமுதல் செய்த இந்தியா.. ஈரானுக்கு சொந்தமானதா?
மும்பை: மும்பை கடல் பகுதியில் சட்டவிரோதமாக நின்று கொண்டிருந்த 3 எண்ணெய் கப்பல்களை இந்தியா பறிமுதல் செய்துள்ளது. ஈரானுடன் தொடர்புடைய மூன்று கப்பல்கள் தான் அவை என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக உறவு மீண்டும் மேம்பட்டுள்ள சூழலில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய கடல்பரப்புகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுகிதா? என்பதை இந்திய கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில்தான், அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட ஈரானுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய்க் கப்பல்களை இந்தியா பறிமுதல் செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 6 ஆம் தேதியே இது தொடர்பான தகவலை இந்திய அதிகாரிகள் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். இருந்தாலும் பின்னர் அந்த பதிவு உடனடியாக அழிக்கப்பட்டது. எண்ணெய் கப்பல் எங்கிருந்து வருகிறது என்பதை மறைக்கும் விதமாக கப்பல்- டூ-கப்பல் (Ship-to-Ship) சரக்குகளை மாற்றும் முயற்சிகளுக்கு இந்திய கடல் எல்லைகள் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய இந்தியா விரும்புகிறது.
3 கப்பல்கள் சிறைப்பிடிப்பு
இத்தகைய மாற்றங்கள் பல சமயங்களில் தடைகள் மீறுவதற்கும், சரக்குகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன என்பதை கண்காணிப்பதிலும் சிக்கலாக உள்ளது. எனவே இதுபோன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், இதுபோன்ற கப்பல் டூ கப்பல் சரக்குகளை மாற்றுவதை இந்தியா அனுமதிப்பது இல்லை.
இந்த சூழலில் தான், ஈரானுடன் தொடர்புடைய மூன்று கப்பல்களை இந்தியா சிறைபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஸ்டெல்லர் ரூபி', 'ஆஸ்பால்ட் ஸ்டார்' மற்றும் 'அல் ஜாஃப்சியா' என்ற மூன்று கப்பல்கள் கடலோர சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க அடிக்கடி தங்களின் அடையாள விவரங்களை மாற்றியதாக தெரிகிறது. இதையடுத்தே மூன்று கப்பல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா அமெரிக்க வர்த்தக உறவு
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக உறவு மீண்டும் மேம்பட்டுள்ள சூழலில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த இந்திய சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் டிரம்ப் கூறினார். இதனைத்தொடர்ந்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மும்பையின் மேற்கு கடற்கரை பகுதியில் சுமார் 100 நாட்டிகல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்ககள் நடைபெறுவதை கண்காணித்த இந்திய கடற்படை மூன்று கப்பல்களையும் பறிமுதல் செய்து மும்பைக்கு கொண்டு வந்து விசரணை மேற்கொண்டு வருகிறது.
ஈரான் மறுப்பு
எனினும், இந்தியாவல் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் கப்பலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்தியா சிறைபிடித்த மூன்று எண்ணெய் கபல்களில் 3 ல் இரண்டு ஈரானுடன் தொடர்புடையது என்றும் அல் ஜஃப்சியா கப்பல் ஈரானில் இருந்து திஜொபோதிக்கு 2025 ஆம் ஆண்டு எண்ணெய் ஏற்றி சென்று இருப்பதாகவும்,
ஸ்டெல்லர் ருபி என்ற இன்னொரு கப்பல் ஈரான் கொடியுடன் சென்றதாகவும், ஆஸ்பால்ட் ஸ்டார் கப்பல் பெரும்பாலும் சீனா ரூட்டில் இயக்கப்படும் ஒரு கப்பல் என்று கப்பல் தரவுகள் கூறுகின்றன. தடை செய்யப்பட்ட எண்ணெய் மற்றும் எரிபொருட்கள் கடுமையான விலை தள்ளுபடியுடன் அடிக்கடி வர்த்தகம் செய்யப்படுகின்றன.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications