Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரத்தன் டாடாவின் "Sir Ratan Tata Trust" பின்னணி என்ன? விடுதலைப் போரில் பங்கு என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவின் தொழில்துறை முகங்களில் ஒன்றான பிரபல தொழிலதிபரும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான மறைந்த ரத்தன் டாடா தலைமைப் பொறுப்பு வகித்த Sir Ratan Tata Trust-ன் பின்னணியில் பல்வேறு சரித்திர நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒட்டுமொத்த தேசமும் புகழஞ்சலி செலுத்தும் ரத்தன் டாட்டாவின் தாத்தாவின் பெயர்தான் "Sir Ratan Tata". 47 ஆண்டுகள் வாழ்ந்த Sir Ratan Tata Trust இந்திய விடுதலைப் போரில் மிக முக்கிய பங்களிப்புகளை செய்து மறைந்தவர் என்கிறது சரித்திரத்தின் பக்கங்கள்.

இந்தியாவில் நூறாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து செயல்பட்டு வரக் கூடிய அறக்கட்டளைகளில் ஒன்று Sir Ratan Tata Trust. மறைந்த ரத்தன் டாடா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் இந்த அறக்கட்டளை இன்றளவும் பல்வேறு வகையான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

ratan tata ratan tata death

Sir Ratan Tata Trust-ன் நிறுவனரான Sir Ratan Tata, ஜாம்ஷேட்ஜியின் இளைய மகன். 1871-ம் ஆண்டு பிறந்த Sir Ratan Tata மும்பை டாடா ஹவுஸ் நிறுவனர். 1896-ம் ஆண்டு தமது 25-வது வயதில் டாடா சன்ஸ் குழுமத்தில் பங்குதாரராக இணைந்தார். அப்போது முதலே பல்வேறு தொழில் துறைகளில் Sir Ratan Tata ஈடுபட்டு கொடிகட்டிப் பறந்தார். சர் ரத்தன் டாடா மற்றும் அவரது அண்ணன் தாரோப்ஜி டாடா இருவரும் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தனர்.

அதே நேரத்தில் சர் ரத்தன் டாடா சமூக பிரச்சனைகளில் கவனம செலுத்தினார். குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி, நிறவெறிக்கு எதிராக நடத்தியப் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தார். அத்துடன் மகாத்மா காந்தியின் நிறவெறி எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அந்த காலத்திலேயே ரூ1,25,000 நன்கொடை கொடுத்தவர்தான் சர் ரத்தன் டாடா என்கிறது சரித்திரம். சர் ரத்தன் டாடாவின் இத்தகைய மாபெரும் ஆதரவை மகாத்மா காந்தி நெகிழ்ந்து தமது சரித்திரட்க்ஹ்தின் பக்கங்களில் எழுதியிருக்கிறார்.

மாபெரும் விடுதலைப் போராட்ட வீரரான கோபால கிருஷ்ண கோகலேயின் ஆத்மார்த்த நண்பராக இருந்தவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரராக மட்டுமல்லாமல் மறுமலர்ச்சி இயக்கங்களின் முன்னோடியாகவும் கோபால கிருஷ்ண கோகலே திகழ்ந்தார். கோகலேவின் சமூக சீர்திருத்தப் பணிகளுக்கு ஆண்டுதோறும் ரூ10,000 நன்கொடை வழங்கியவர் சர் ரத்தன் டாடா.

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பல்வேறு துறைகள், அறக்கட்டளைகள் தொடங்குவதற்கும் நிதி உதவிகளை வாரி வழங்கிய வள்ளலாக இருந்தவர் சர் ரத்தன் டாடா.

இந்தியாவின் வரலாற்றை அகழாய்வுகள் மூலம் அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டியவர் சர் ரத்தன் டாட்டா. பாடலிபுத்திரம் அகழாய்வு, மவுரியப் பேரரசு காலத்து நாணயங்கள் அகழாய்வு, பேரரசர் அசோகர் அரண்மையின் அகழாய்வு ஆகியவை சர் ரத்தன் டாடாவின் பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டவை.

சர் ரத்தன் டாடா, 1892-ல் திருமணம் செய்து கொண்டார். 1915-ம் ஆண்டில் மும்பை டாடா ஹவுஸ் உருவாக்கினார். இங்கிலாந்துக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்ற நிலையில் அங்கே காலமானார். அவரது உடல் லண்டன் ப்ரூக்உட் கல்லறையில் தந்தைக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

சர் ரத்தன் டாடா தமது குடும்பத்தைச் சேர்ந்த நவல் ஹெச்.டாடாவை தத்தெடுத்திருந்தார். நவல் ஹெச்.டாடா, இருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களில் ஒருவரது மகன்தான் தற்போது மறைந்த ரத்தன் டாடா.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தாத்தாவின் அதே தொழில் துறை முன்னேற்றம், சமூக அர்ப்பணிப்புக்காக தாத்தாவின் பெயரிலான "Sir Ratan Tata Trust" அறக்கட்டளையை தொடர்ந்து முன்னெடுத்து நடத்தியவர்தான் மறைந்த ரத்தன் டாடா. தாத்தாவின் பேர் சொல்லும் பிள்ளையாக வாழ்ந்து மறைந்துள்ளார் இந்தியாவின் தொழில் முகம் ரத்தன் டாடா!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+