தூங்காத பிரதமர் மோடிக்கு "இன்சோம்னியா".. பெருமை பேசாமல் சிகிச்சை கொடுங்க! பிரகாஷ்ராஜ் பரபர விமர்சனம்
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்த கருத்தை ட்விட்டரில் நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
கடந்த ஞாயிறு அன்று மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "கோலாப்பூர் இடைத்தேர்தலில் சத்யஜித் கடமின் வேட்புமனுவை பாஜக தேசிய தலைமைக்கு அனுப்பி பரிந்துரை செய்திருக்கிறோம். மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரகாந்த் ஜாதவின் மனைவி இந்த தேர்தலில் போட்டியிட தயாராக இருந்தால் அவருக்கும் வேட்பு மனு வழங்கப்படும்.

2024 தேர்தலில் வெல்ல வேண்டும்
நாடாளுமன்றத்தில் நாம் வகுத்துள்ள பல திட்டங்களை செய்து முடிப்பதற்கு மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மை கட்டாயம் தேவை. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் நீங்கள் முழு ஈடுபட்டை காட்ட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி 60 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவி இருக்கிறார். இது இவ்வுலத்திற்கு எவ்வளவு பயனுள்ள செயல் என்பதை நாம் அறிவோம்.

மோடி ஆட்சியில் இந்துக்கள் ஆதிக்கம்
இந்தியாவில் இதற்கு முன் 2 முறை இந்துக்கள் ஆதிக்கம் ஓங்கி இருந்தது. முதல்முறை பிரித்விராஜ் சவுகான் காலத்தில் இந்துக்கள் ஆதிக்கம் இருந்தது. 2 வது முறை சத்ரபதி சிவாஜி காலத்தில் இந்துக்கள் இந்தியாவில் ஆதிக்கம் ஓங்கியது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி காலத்தில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதற்காக நான் சத்ரபதி சிவாஜியுடன் நரேந்திர மோடியை ஒப்பிட்டு பேசுகிறேன் என்று நினைத்துவிட வேண்டாம்.

தூங்காமல் இருக்க மோடி பயிலும் வித்தை
பிரதமர் நரேந்திர மோடி 24 மணி நேரமும் நாட்டுக்காக உழைக்க தூங்காமல் இருப்பதற்கு பல்வேறு வித்தைகளை கற்று வருகிறார். தற்போது ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டும் தூங்கும் அவர், இனி 24 மணி நேரமும் தூங்காமல் இருப்பார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றிபெற அனைவரும் உழைக்க வேண்டும்." என்றார்.

கலாய்த்த நடிகர் பிரகாஷ் ராஜ்
இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், "தயவுசெய்து சற்று புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்ளுங்கள். தூங்க முடியாமல் இருப்பது இன்சோம்னியா எனப்படும் நோய். அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதுகுறித்து பெருமை பேசாதீர்கள். தயவு செய்து உங்கள் தலைவரின் நலனில் அக்கறை செலுத்துங்கள்" எனக் குறிப்பிட்டு உள்ளார்.
-
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications