ஏஜென்ட் இல்லை.. சொதப்பும் சர்வதேச டெண்டர்.. முன்வராத வேக்சின் நிறுவனங்கள்.. சிக்கலில் மாநில அரசுகள்!
மும்பை: வேக்சின் வாங்குவதற்காக என்று மாநில அரசுகள் சர்வதேச டெண்டர் விட்டாலும் கூட வெளிநாட்டு வேக்சின் நிறுவனங்கள் அதற்கு முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியே பதில் வந்தாலும் கூட மருத்துவ துறையில் தொடர்பு இல்லாத ஏஜெண்டுகளிடம் இருந்து மட்டுமே பதில் வருவதாக கூறுகிறார்கள்.
Recommended Video
இந்தியாவில் மக்களுக்கு வேக்சின் கொடுப்பதில் மத்திய அரசு மோசமாக சொதப்பி உள்ளது. ஒற்றை நாடு, ஒற்றை கொள்கை என்று கூறி வந்த மத்திய அரசு, நாட்டு மக்கள் எல்லோருக்கும் ஒன்றாக வேக்சின் போட முடியாமல், போதுமான வேக்சினை ஆர்டர் கூட செய்யாமல் சொதப்பி உள்ளது.
வேக்சினை மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததால், தற்போது மாநில அரசு சர்வதேச அளவில் வேக்சின் கேட்டு டெண்டர் விடும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழகமும் சர்வதேச டெண்டர் விட்டுள்ளது.

டெண்டர்
மாநில அரசுகள் சர்வதேச டெண்டர் விட்டாலும் கூட வெளிநாட்டு வேக்சின் நிறுவனங்கள் அதற்கு முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் மஹாராஷ்டிரா சார்பாக சர்வதேச டெண்டர் விடப்பட்டது. ஆனால் அதற்கு வேக்சின் நிறுவனங்கள் பெரிதாக பதில் அளிக்கவில்லை. பல சிறிய நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள், ஏஜெண்டுகள்தான் தற்போது டெண்டருக்கு பதில் அளித்துள்ளனர்.

ஏன்
மஹாராஷ்டிரா மற்றும் மும்பை சார்பாக வெளியிடப்பட்ட டெண்டர் ஒன்றுக்கு ரோமானிய நிறுவனம் பத்தி அளித்தது. அதில் பைசர் வேக்சினை ஏற்றுமதி செய்கிறோம் என்று கூறியுள்ளது. ஆனால் பைசர் நிறுவனமோ, அந்த ரோமானிய கம்பெனிக்கும் எங்களுக்கு தொடர்பு இல்லை, அவர்கள் எங்களின் அதிகாரபூர்வ ஏஜென்ட் இல்லை என்று கூறியுள்ளது. பல வெளிநாட்டு வேக்சின் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுக்கு ஏஜென்ட் யாரும் இல்லை என்று கூறியுள்ளது.

மஹாராஷ்டிரா
மஹாராஷ்டிராவிற்கு இதுவரை 8 ஏஜென்ட் நிறுவனங்கள் இப்படி பதில் அளித்துள்ளன. நாங்கள் வேக்சினை பெற்று தருகிறோம், கமிஷன் கொடுங்கள் என்று கூறியுள்ளன. இதில் 3 நிறுவனங்கள் மட்டுமே மருத்துவத்துறை தொடர்பானது. மற்ற நிறுவனங்கள் எல்லாம் சினிமா, ஏற்றுமதி இறக்குமதி, உணவு விற்பனை, கன்சல்டன்சி என்று வெவ்வேறு துறையை சேர்ந்த நிறுவனங்கள்.

விலை
அதிலும் இந்த நிறுவனங்கள் ஒரு டோஸ் வேக்சினுக்கு 728 ரூபாய் முதல் 2767 ரூபாய் வரை கேட்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த நிறுவனங்கள் எல்லாம் வேக்சின் நிறுவனங்களின் அதிகாரபூர்வ பார்ட்னர்களோ, ஏஜெண்ட்களோ கிடையாது. மகாராஷ்டிராவின் டெண்டருக்கு இந்தியாவை சேர்ந்த GameChangerz;, Tapadiya International Interventional Technology and Healthcare Ltd, GetIt Innovations Private Ltd ஆகிய நிறுவனங்களும் பதில் அளித்துள்ளன.

மருத்துவத்துறை
இதில் GameChangerz நிறுவனம் மருத்துவத்துறை கிடையாது, இது ஆட்டோமொபைல் நிறுவனம். GetIt Innovations Private Ltd சினிமா துறை நிறுவனம். Tapadiya நிறுவனம் மருத்துவத்துறையில் சில ஆண்டுகள் மட்டுமே அனுபவம் கொண்ட, மிக சிறிய கம்பெனி. இந்த நிறுவனங்கள் ஸ்புட்னிக் வி வேக்சினை பெற்று தருவதாக கூறியுள்ளன. ஆனால் ரஷ்யாவோ இந்தியாவில் எங்களுக்கு டாக்டர்ஸ் ரெட்டி நிறுவனத்தை விட வேறு அதிகாரபூர்வ பார்ட்னர் கிடையாது என்று கூறியுள்ளது.

வேக்சின் கிடைக்காது
இதனால் சின்ன நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்து வேக்சினை வாங்கிக் கொள்ளலாம் என்று கனவு காண முடியாது. இந்தியாவில் இருக்கும் டீலர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு டீலர்கள், ஏஜெண்டுகளை கூட வேக்சின் நிறுவனங்கள் ஏற்றுகொள்வது இல்லை. ராஜஸ்தான் அரசும் இதேபோல் வேக்சின் வாங்குவதற்காக சர்வதேச அளவில் டெண்டர் விட்டு இருந்தது. ஆனால் ராஜஸ்தான் அரசின் இந்த டெண்டரில் வேக்சின் நிறுவனங்கள் பல அதிக தொகை கேட்டு இருக்கிறது.

மதிக்கவில்லை
தற்போது மார்க்கெட்டில் உள்ள தொகையை விட அதிக தொகைக்கு மட்டுமே வேக்சின் கொடுப்போம் என்று நிறுவனங்கள் கூறியுள்ளன. மற்ற நிறுவனங்கள் எதுவும் மகாராஷ்டிரா அரசுக்கோ, ராஜஸ்தான் அரசுக்கோ பதில் அளிக்கவில்லை. மாநில அரசுகளுடன் வேக்சிங் வர்த்தகம் மேற்கொள்ள வேக்சின் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. பெரிய நிறுவனங்கள் நேரடியாக பதில் அளிப்பது இல்லை.

மத்திய அரசு
மாடர்னா, பைசர் போன்ற நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு வேக்சின் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது. இதனால் மாநில அரசுகள் வேக்சின் பெறுவது பெரிய சிக்கல் ஆகியுள்ளது. மாறாக மத்திய அரசுடன் மட்டுமே வேக்சின் விற்பனையை மேற்கொள்வோம் என்று கூறிவிட்டது. இதனால் மத்திய அரசு சர்வதேச டெண்டர் விட்டால் மட்டுமே மக்களுக்கு வேக்சின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications