"பிக்ஸிங் பண்ணிட்டாங்கனு ஒரே அழுகை".. கதிகலங்க வைத்த "மும்பை பால்டன்ஸ்".. வைரலாகும் மீம்ஸ்!
மும்பை: 2021 ஐபிஎல் தொடரில் மும்பை அணி அதிகாரபூர்வமாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது. மும்பை அணி வெளியேறுவது நேற்றே கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
நேற்றே கொல்கத்தா அணி வெற்றிபெற்றதால் இன்று மும்பை அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதேபோல் இன்று மும்பை அணியும் அதிரடியாக ஆடி 20 ஓவரில் 235 ரன்கள் எடுத்தது. இதனால் எங்கே மும்பை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் ஹைதராபாத் அணியோ விக்கெட் இழப்பின்றி 65 ரன்களை எளிதாக கடந்தது. இதனால் கணக்குப்படி மும்பை அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்த முடியாது.

வெளியேறியது
இதனால் மும்பை அணி இந்த தொடரில் இருந்து இன்று அதிகாரபூர்வமாக வெளியேறியது. மும்பை இன்று வெளியேறி இருந்தாலும் நேற்றில் இருந்தே மும்பை அணிக்கு எதிராக கடுமையான மீம்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. நடப்பு சாம்பியன் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாத நிலையை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். நேற்றில் இருந்தே பலரும் இணையத்தில் மீம் போட்டு மும்பை அணியை கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

மும்பை பேட்டிங்
மும்பை அணி இன்று போராடிதான் ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இன்றைய போட்டியில் வென்றாலும் கூட மும்பை அணிக்கு ப்ளே செல்லும் வாய்ப்பு கிடைக்காது. இதை மையமாக வைத்து பல மீம்ஸ்கள் இணையத்தில் போடப்பட்டுள்ளது. முக்கியமாக சரியாக பவுலிங்கும் செய்யாமல், பேட்டிங்கும் செய்யாமல் தொடர்ந்து சொதப்பி வந்த குர்ணால் பாண்டியா போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததை பலர் விமர்சனம் செய்து இருந்தனர்.

மீம்ஸ்
மும்பை எப்படி எல்லாம் ப்ளே ஆப் உள்ளே வர முடியும் என்பதை வைத்தும் நிறைய மீம்ஸ் போடப்பட்டது. இப்ப கூட ப்ளே ஆப் உள்ள நீங்க வர சான்ஸ் இருக்கு.. எப்டிடா... ஆடியன்ஸா வேணா வரலாம் என்ற இந்த மீம் ட்வீட்டரில் வைரலானது.

டாட்டா
சிஎஸ்கே, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் அணிகள் ப்ளே செல்வதை வைத்து பலர் மீம்ஸ் வெளியிட்டு உள்ளனர். இந்த நான்கு அணிகள் சேர்த்து மும்பை அணிக்கு சோகமாக டாட்டா காட்டுவது போல வெளியான இந்த மீம் வைரலாகி உள்ளது.

170 ரன்கள்
இன்றைய போட்டியில் 170 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றிபெற வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால் பலர் டி 20 போட்டியில் 300 ரன் அடிப்பது எப்படி, 400 ரன் அடிப்பது எப்படி என்று பல மீம்களை வெளியிட்டு வந்தனர்.

மும்பை
இன்று மும்பை அணி எளிதாக 235 ரன்கள் எடுத்த போது அதை பலரும் பிக்சிங் என்றும் இணையத்தில் விமர்சனம் செய்தனர். காசு கைமாறிவிட்டது. மும்பை அணி ப்ளே ஆப் செல்ல போகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் மும்பை அணி ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இதை வைத்தும் நிறைய மீம்ஸ் போடப்பட்டது.

பிக்சிங்
இந்த பிக்சிங் தொடர்பாக பலர் இணையத்தில் இன்று மீம் போட்டு கடைசியில் ஏமாந்து போனது குறிப்பிடத்தக்கது. First Innings முடிஞ்சதும் அம்பானி பிக்ஸிங் பண்ணிட்டானு ஒரே அழுக
அப்புறம் SRH 65 அடிச்சதும் தான் அமைதி ஆனானுக Maakkaans, என்று சிஎஸ்கே அணியை கிண்டல் செய்துள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications