ஐபிஎல் கிரிக்கெட் போட்டி செப்.19ல் தொடங்குகிறது.. நவ.10ல் இறுதி போட்டி.. மத்திய அரசு பச்சை கொடி

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந் போட்டி துபாயில் நடைபெறுகிறது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.

மும்பை ஐபிஎல் நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

the IPL Governing Council has received official clearance from the Indian Govt to host PL2020 in the UAE

இதையடுத்து ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடரை செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை துபாயில் நடந்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் அட்டவணை நாளை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டி ஒவ்வொரு நாளும் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.முதல் போட்டியான செப்டம்பர் 19ம் தேதி மட்டும் மாலை 3.30மணிக்கு தொடங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டிகள் துபாய், அபுதாபி மற்றும் சர்ஜா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் 24 பேரை தேர்வு செய்து அழைத்து வரலாம். வழக்கமாக 16 பேர் அணியில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இப்போது 24 பேரை தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டள்ளது. விவோ மொபைல் நிறுவனம் தான் வழக்கம் போல் இந்த முறையும் டைட்டில் ஸ்பான்சராக தொடர்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+