மோசடி மன்னன் சுகேசுடன் பிரபல நடிகை நெருக்கம்.. வெளியான செல்ஃபி.. நடிகைக்கு இறுகும் பிடி?
மும்பை: ரூ 200 கோடி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததை போல பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இவர் பல கோடி ரூபாய் வரை முறைகேடாக பணம் சம்பாதித்ததாக மத்திய அமலாக்கத் துறை பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் டெல்லி அமலாக்கத் துறை உயரதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் வீடு, சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பங்களா உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

லேப்டாப்
அப்போது 20 சொகுசு கார்கள், லேப்டாப் மற்றும் ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தபடியே பல ஒப்பந்தங்களை முடித்து தருவதாக மருந்து நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷிவந்தர் சிங்கின் மனைவியை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டார் அவரிடம் இருந்து 200 கோடி பணத்தை பெற்று மீண்டும் கைதாகியுள்ளார் சுகேஷ்.

சுகேஷின் மனைவி
இந்த மோசடி தொடர்பாக சுகேஷின் மனைவியும் நடிகையுமான லீனா மரிய பாலை கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவர் மூலம் சுகேஷ் பல மோசடிகளை அரங்கேற்றியதும் தெரிகிறது. இந்த நிலையில் பணம் மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 7 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் சுகேஷிடம் பணத்தை இழந்திருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் சுகேஷும் ஜாக்குலினும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்குலினுக்கு சுகேஷ் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதங்களில் எடுத்திருக்கலாம். அப்போது இரட்டை இலை வழக்கில் சுகேஷ் ஜாமீனில் இருந்தார்.

சென்னையில் சந்திப்பு
ஜாக்குலினை சுகேஷ் 4 முறை சென்னையில் சந்தித்திருப்பதாகவும் அவரை சந்திப்பதற்காக மும்பையில் இருந்து தனிவிமானத்தில் ஜாக்குலின் வர சுகேஷ் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த புகைப்படம் இவர்கள் நெருக்கமாக இருக்கும் போது கண்ணாடி முன் எடுக்கப்பட்ட செல்பியாகும்.

சிறையிலும் ஐபோன்
இந்த போன் ஐபோன் 12 புரோ ஆகும். இந்த போனில் இஸ்ரேல் நாட்டின் சிம்கார்டை போட்டு அதன் மூலம் பல மோசடிகளை சுகேஷ் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது. சிறையினுள்ளும் சுகேஷ் இதே போனைதான் பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. சுகேஷுடன் டேட்டிங் சென்றீர்களா என கடந்த மாதம் அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் ஜாக்குலின் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications