மகாராஷ்டிராவில் திருப்பம்.. சிவசேனாவிடம் இருந்து வந்த மெசேஜ்.. என்சிபி தலைவர் அஜித் பவார் தகவல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: சிவசேனா கட்சி தலைமையில் ஆட்சி அமைக்கலாம் என்பதை குறிக்கும் வகையிலான மெசேஜ் தனக்கு சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்திடம் இருந்து வந்திருப்பதை தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் செய்தியாளர்களிடம் காட்டினார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் தனது கூட்டணி கட்சியான சிவசேனா தயவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையில் பாஜக உள்ளது.

ஆனால் சிவசேனா கட்சியோ 50க்கும் 50 பார்முலாவுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும இரண்டரை வருடம் பாஜக வசம் முதல்வர் பொறுப்பும், இரண்டரை வருடம் சிவசேனா வசம் முதல்வர் பொறுப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

சிவசேனா மிரட்டல்

சிவசேனா மிரட்டல்

ஆனால் இதற்கு பாஜக ஒப்புக்கொள்ளவில்லை. இதன் காரணமாக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் கோபத்தில் உள்ள சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாக மறைமுகமாக மிரட்டல் விடுத்து வருகிறது.

சஞ்சய் ராவத் பேச்சு

சஞ்சய் ராவத் பேச்சு

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் அண்மையில் அளித்த பேட்டியில் சிவனோ தலைமையில் தான் மகாராஷ்டிராவில் ஆட்சி உறுதியாக அமையும் என்றும், தங்கள் கட்சிக்கு 170 எம்பிக்கள் ஆதரவு இருப்பதாகவும் கூறினார். இவரது பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் ஆலோசனை

டெல்லியில் ஆலோசனை

தேசிய வாத காங்கிரஸ் நிறுவனர் சரத்பவார் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து விவாதித்து வருகிறார்.இந்நிலையில் சிவசேனா கட்சி தலைவர் அஜித் பவாருக்கு சிவசேனா எம்பி சஞ்சய் ரவாத்திடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது.

சிவசேனா மெசேஜ்

சிவசேனா மெசேஜ்

அஜித் பவார் தனது செல்போனுக்கு வந்துள்ள மெசேஜை காண்பித்து பேசினார். அதில் சஞ்சய் ராவத்தின் வணக்கங்கள் ஜெய் மகாராஷ்டிரா என்று குறிப்பிட்டுள்ளதை வாசித்தார். இதற்கு தொடர்ந்து விளக்கம் அளித்த அஜித பவார், இதன் பொருள் நான் அவரை அழைக்க வேண்டும். நான் அழைத்து சரிபார்த்துக்கொள்வேன் என்றார். சிவசேனாவுக்கும் பாஜகவும் இடையேயான அதிகார மோதலுக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+