ப்பா என்னங்க இது.. ஒரே மரத்தில் 3 பாம்புகள் படம் எடுத்த காட்சி.. வைரலாகும் வீடியோ!
மும்பை: மகாராஷ்டிராவில் ஊருக்குள் வந்த பாம்புகளை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டபோது அவை நேராக மரத்தில் ஏறி ஒன்றோடொன்று பிணைந்து நின்ற புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
Recommended Video
இந்த படத்தை ஆசீர்வாதமாக கருதிய பொதுமக்கள், வன அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

காடுகள் அதிசயமானவை
இந்தியாவில் மனிதர்கள் வாழும் இடங்களை விட விலங்குகள், பறவைகள் வாழும் காடுகள் மிக அற்புதமானவை. காடுகள், வனப்பகுதிகள் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாக இருப்பதால் இங்கே ஆச்சரியங்களுக்கு பஞ்சமில்லை. இங்குள்ள காட்சிகளை பலமுறை வீடியோக்களிலும், தொலைக்காட்சிகளிலும் பகிர்ந்து மூக்கில் விரல் வைத்து கண்டு ரசித்துள்ளோம். உயிரினப் பூங்காவில் பார்க்காத விலங்கினங்களின் செயல்பாடுகளை கண்டு ரசித்துள்ளோம்.

ஒரே மரத்தில் 3 பாம்புகள்
தற்போது, மகாராஷ்டிராவில் மூன்று பாம்புகள் ஒன்றாக அதுவும் ஒரே மரத்தில் பிணைந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் நேற்று இந்திய வனவிலங்கு என்ற ஃபேஸ்புக் தளத்தில் வெளியானது. ஊருக்கு வந்த பாம்புகள் பிடிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விடும்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஹரிசல் வனப்பகுதியில் பாம்புகள்
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள ஹரிசல் வனப்பகுதியில் மூன்று நாகப்பாம்புகள் மரத்தடியில் சுருண்டு கிடப்பதை ராஜேந்திர செமால்கர் என்பவர் புகைப்படம் படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் இதுபோன்று 3 பாம்புகள் ஒன்றாக சுருண்டு இருக்கும் காட்சிகளை காண்பது அரிது என தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை நேற்றே 4,700 பேர் பார்த்து விரும்பிய நிலையில் பல்வேறு தரப்பினரும் ஷேர் செய்து வருகின்றனர்.

பாம்பு புகைப்படம் ஒரு ஆசீர்வாதம்
அந்த புகைப்படத்தை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில் மூன்று கருப்பு பாம்புகள் ஒரு மரத்தை சுற்றிக் கொண்டு படம் எடுப்பது போல் காட்சி அளிக்கின்றன. இது போன்ற புகைப்படம் நமக்கு கிடைத்திருப்பது ஒரு ஆசீர் வாதம்தான் என சுசாந்தா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த பதிவையும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications