இந்த கிரிக்கெட் வீரர்கள் ஏன் நாய்களை போல் குரைக்கிறார்கள்.. கங்கனா போட்ட மோசமான ட்வீட் நீக்கம்!
மும்பை: கிரிக்கெட் வீரர்கள் ஏன் நாய்களை போல குரைக்கிறார்கள் என விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட ரோஹித் சர்மாவை நடிகை கங்கனா ரனாவத் மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார்.
கடந்த 70 நாட்களாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டமும் இவர்களது கஷ்டமும் வெளிநாடு வரை சென்றுவிட்டது.
ஹாலிவுட் பாப் பாடகி ரிஹான்னா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்துகளை தெரிவித்தது இந்தியாவில் புயலை கிளப்பியுள்ளது.

வெளிநாட்டினர்
இந்தியாவின் உள் விவகாரத்தில் வெளிநாட்டினர் தலையிடுவது ஏன் என இந்தியா தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. சிலர் விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

முன்னேற்றம்
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கும் போது இந்தியா வலுவாக இருக்கிறது. விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய நேரம் இது. நாட்டின் முன்னேற்றத்தில் விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

நாய்கள்
அனைவரும் ஒன்றாக ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதில் தங்கள் பங்கை வகிப்பார்கள் என நம்புகிறேன் என பதிவிட்டிருந்தார். இந்த கருத்திற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் நாய்களை போல ஏன் குரைக்கிறார்கள்?

சட்டங்கள்
விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட சட்டங்களை விவசாயிகளே ஏன் எதிர்க்கிறார்கள்? மோதல்களுக்கு காரணமானவர்களை பயங்கரவாதிகள் என்று அவர் மீண்டும் விமர்சித்துள்ளார். இதையடுத்து அந்த கருத்து சர்ச்சைக்குரியதானதால் சில நிமிடங்கள் டிவிட்டர் நிறுவனம் அதை நீக்கியது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications