பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கொரோனா டெஸ்ட்.. அத்துமீறிய லேப் டெக்னிஷியன்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்
பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கொரோனா டெஸ்ட் செய்த நபர் கைது செய்யப்பட்டார்
மும்பை: கொரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்று பிறப்புறுப்பிலும் டெஸ்ட் எடுத்து பார்க்க வேண்டும் என்று இளம்பெண்ணிடம் அத்துமீறி உள்ளார் ஒரு லேப் டெக்னிஷியன்.. இது தொடர்பாக புகார் அளித்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் அமராவதி பகுதியில் ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.. இங்கு 24 வயசு பெண் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார்.
இவருடன் வேலை பார்த்தவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.. அதனால், இந்த பெண்ணும், தனக்கும் தொற்று இருக்கிறதா என செக் செய்து கொள்ள, அங்கிருந்த கொரோனா அவசர சிகிச்சை மையத்திற்கு சென்றார்.

சளி மாதிரிகள்
அங்கு ஒரு லேப் டெக்னீசியன் இருந்துள்ளார்.. சம்பந்தப்பட்ட பெண்ணின் மூக்கு வழியாக சளி மாதிரிகளை எடுத்து கொண்டார்.. பிறகு அந்தரங்க உறுப்பிலும் மாதிரிகள் எடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்.. இந்த பெண்ணுக்கு கொரோனா டெஸ்ட் பற்றி தெரியாததால், அதற்கு சம்மதித்து உடன்பட்டுள்ளார்.

அதிர்ச்சி
முகாமில் தனக்கு டெஸ்ட் எப்படியெல்லாம் எடுக்கப்பட்டது என்பது குறித்து தன்னுடைய தோழிகளிடம் சொல்லி உள்ளார்.. இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரரிடம் இதை பற்றி தெரிவித்தனர்.. பிறகு இவர்கள் அனைவரும் சேர்ந்து டாக்டர்களிடம் சென்று கொரோனா டெஸ்ட் எப்படி எடுக்கப்படுகிறது என்று விசாரித்தனர்.

வன்கொடுமை
மூக்கு அல்லது தொண்டையில் இருந்து மட்டுமே சளி மாதிரிகள் எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் விளக்கி உள்ளனர். இதையடுத்து, அந்த லேப் டெக்னீசியன் மீது போலீசில் புகார் தரப்பட்டது.. பாலியல் வன்கொடுமை வழக்கில் லேப் டெக்னீசியன் கைதும் செய்யப்பட்டுள்ளார். இப்போதெல்லாம் கொரோனாவைவிட, இந்த காமுகன்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

சத்தார்பூர்
கடந்த வாரம்கூட கொரோனா மையத்தில் ஒருவர், தொற்று பாதித்த 40 வயசு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.. அதேபோல, தொற்று இருக்கிறதா என்று செக் செய்கிறேன் என சொல்லி, 14 வயது சிறுவனின் டிரஸ்ஸை கழட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் ஒருவர்.. டெல்லி சத்தார்பூரில் 14 வயசு பெண்ணை கொரோனா மையத்தில் உள்ள பாத்ரூமிலேயே 19 வயசு இளைஞர் பலாத்காரம் செய்தார்.

முகாம்கள்
இப்படி கொரோனா மையங்களிலேயே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.. இதற்கெல்லாம் என்ன காரணம்? சில தனிமைப்படுத்தப்படும் முகாம்கள் வீடுகள் போல இருக்கிறது என்று பரவலாக சொல்லப்படுகிறது. நோயாளிகள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு தனி தனி ரூம்கள் போல ஒதுக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி
இதைதான் இந்த காமுகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.. கொரோனா சிகிச்சை மையங்களிலும் சரி, முகாம்களிலும் சரி, தீவிர கண்காணிப்பு தேவைப்படுகிறது.. சிசிடிவி போன்றவைகளை பொருத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.. மேலும் கொரோனா டெஸ்ட்கள் குறித்த விழிப்புணர்வும் சொல்லப்பட வேண்டி உள்ளது!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications