சிக்சர் அடிக்கும் "இந்தியா" கூட்டணி.. மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு அதிர்ச்சி தோல்வி.. லோக்போல் சர்வே
மும்பை: மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலை குறித்து லோக்போல் அமைப்பு எடுத்த சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்றும் பாஜகவுக்கு அங்கு அதிர்ச்சி தோல்வி காத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
நமது நாட்டில் சமீபத்தில் தான் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது, அடுத்து இந்த மாதம் ஹரியானா, காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. விரைவில் ஜார்கண்ட், மகாராஷ்டிரா தேர்தலும் நடக்க உள்ளது.

மகாராஷ்டிரா: இதற்கிடையே மகாராஷ்டிர தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 145 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு இப்போது பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவி வருகிறது.
எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும்: இதற்கிடையே மகாராஷ்டிராவில் இந்த முறை இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று லோக்போல் அமைப்பின் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ்- சரத் பவார் என்சிபி- தாக்ரே சிவசேனா கூட்டணி 141 முதல் 154 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 115 முதல் 128 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் அங்கு 5 முதல் 8 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக லோக்போல் அமைப்பின் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவிகிதம்: அதேபோல வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகளின் கூட்டணி 41% முதல் 44% வரையிலான வாக்குகளைப் பெறும் என்றும் என்டிஏ கூட்டணி 38-41% வரையிலான வாக்குகளைப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் சுயேச்சைகள் எல்லாம் சேர்ந்து 15- 18% வாக்குகளைப் பெறும் என்று அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை நடந்தது என்ன: மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை அங்குக் கடந்த 2014 முதல் என்டிஏ கூட்டணியே ஆட்சியில் இருந்தது. 2019 தேர்தலுக்குப் பிறகு பாஜக- சிவசேனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இந்த கூட்டணி முறிந்தது. அப்போது தான் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் இணைந்து ஆட்சியைப் பிடித்தது. உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்றார். இருப்பினும், அந்த ஆட்சி 2.5 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
உத்தவ் தாக்ரேவுக்கு எதிராக சிவசேனாவின் ஷிண்டே கலகம் செய்தார். தனது ஆதரவாளர்களுடன் சென்று அவர் பாஜக உடன் கூட்டணி அமைத்தார். இதனால் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்றார். அதற்கு மறு ஆண்டே என்சிபி கட்சியிலும் சரத் பவாருக்கு எதிராகக் கலகம் செய்துவிட்டு அஜித் பவார் வந்து பாஜக கூட்டணியில் ஐக்கியமானது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தல் முடிவுகள்: கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் அங்கு எதிர்க்கட்சிகளுக்கே அதிக சீட் கிடைத்தது. மகாராஷ்டிராவில் மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 30 தொகுதிகளை இந்தியா கூட்டணி வென்றது. காங்கிரஸ் 13 இடங்களிலும், தாக்ரே சிவசேனா 9 இடங்களிலும், சரத் பவார் என்சிபி 8 இடங்களிலும் வென்று இருந்தது.
அதேநேரம் அங்கு என்டிஏ கூட்டணியால் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. குறிப்பாக பாஜக அங்கு ஒற்றை இலக்கில் வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஷிண்டே சிவசேனா 7 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி ஒரே ஒரு இடத்தல் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications