Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடவுள் ராமர் சாப்பிட்டது அசைவ உணவு தான்.. என்சிபி தலைவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. வெடித்த சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

மும்பை: கடவுள் ராமர் ஒன்றும் சைவம் இல்லை. அவர் அசைவ உணவு தான் சாப்பிட்டார் என தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜிதேந்திர அவாத் கூறியிருக்கும் வீடியோ வெளியாகி வேகமாக பரவி வரும் நிலையில் சர்ச்சை வெடித்துள்ளது.

உச்சநீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் கட்டுமான பணி தொடங்கியது.

Lord Ram was non-vegetarian, says Nationalist Congress Party leader Jitendra Awhad, Controversy

இந்நிலையில் கோவிலின் முதற்கட்ட பணி முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோவில் கருவறையில் 5 வயது குழந்தை வடிவ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், கரசேவகர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என ஏராளமானவர்கள் விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் தான் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிதேந்திரா அவாத் கடவுள் ராமர் குறித்து பேசிய கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளார். ராமர் சைவம் உண்பவர் இல்லை. அவர் அசைவம் சாப்பிடுபவர்கள் என ஜிதேந்திரா அவாத் தெரிவித்து இருப்பது தான் விவாதத்தை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஜிதேந்திரா அவாத் கூறியுள்ளதாவது:

ராமர் எங்களுக்கானவர். அவர் பகுஜனை சேர்ந்தவர். ராமர் வேட்டையாடி சாப்பிட்டவர். ஆனால் அவரை நீங்கள் சைவ உணவு உண்பவராக மாற்ற விரும்புகிறீர்கள். ஆனால் நாங்கள் அவரை மட்டன் சாப்பிட்டவராக கருதுகிறோம். அவர் சைவ உணவை பின்பற்றுபவர் அல்ல. அவர் அசைவ உணவு உண்டவர்.

மேலும் ராமர் என்ன சாப்பிட்டார் என்பது நீண்டகால சர்ச்சையாக உள்ளது. வெந்தயப்பொறியல் சாப்பிட்டதாக யாரோ கூறியுள்ளார்கள். ஆனால் 14 ஆண்டுகளாக காட்டில் வாழ்ந்த ரமான் சைவ உணவை தேடி எங்கே சென்றிருப்பார். இதனை சிந்தித்து பார்த்தாலே தெரியும். நான் கூறுவது சரியா? தவறா? என்று. நான் எப்போதும் சரியான ஒன்றை மட்டுமே கூறுவேன்.

மேலும் இந்திய மக்கள்தொகையில் 80 சதவீதம் பேர் அசைவம் உண்பவர்களாக உள்ளனர். அவர்கள் ராமரின் பக்தர்களாகவும் இருக்கின்றனர். இத்தகைய சூழலில் இந்தியாவை சைவம் உண்ணும் நாடாக காட்டுவதற்கான முயற்சியில் சிலர் இறங்கி உள்ளனர்'' என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் ஜிதேந்திர அவாத்தின் கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவருக்கு எதிராக போலீஸ் நிலையங்களில் புகார்கள் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+