சுடுகாட்டில் பரபரப்பு.. 2 சடலங்களுக்கு கல்யாணம்.. ஒரே குழிக்குள் ஜோடியை புதைத்து.. என்னாச்சு..?
சுடுகாட்டில் காதல் ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளது
மும்பை: இரு வீட்டு பெற்றோர்களின் சம்மதப்படி, சுடுகாட்டில் ஒரு காதல் ஜோடிக்கு கல்யாணம் நடந்துள்ளது..!
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தின் வேட் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. வழக்கமாக சாதி பிரச்சனைதான் காதல் திருமணங்களில் தடையை ஏற்படுத்தும்..
அதுபோல இந்த திருமணத்திலும் சாதி பிரச்சனைதான் தலைதூக்கி உள்ளது.. ஆனால், வித்தியாசமான முறையில் தலைதூக்கி உள்ளது..

போலீஸ்
கடந்த ஆகஸ்ட் 1-ம்தேதி இந்த கிராமத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் ஒரு ஜோடி தூக்கு போட்டு கொண்டது.. அவர்கள் இருவரும் தூக்கில் தொங்குவதை பார்த்த அந்த கிராம மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றினர்..

தற்கொலை
உயிரிழந்தவர்கள் இருவரும் காதல் ஜோடி என்பதும் பக்கத்தில் இருக்கும் பலாத் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.. அவர்கள் 22 வயது முகேஷ் சோனவானே, 19 வயது நேஹா தாக்கரே.. இருவரும் காதலித்து வந்தனர்.. திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.. தங்கள் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் பெற முடிவெடுத்தனர்..

ஒரே சாதி
முகேஷ் தன் பெற்றோரிடம் இதை பற்றி சொன்னதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.. காரணம், சாதி பிரச்சனைதான்.. இருவருமே ஒரே சாதியை மட்டுமல்ல ஒரே உட்பிரிவையும் சேர்ந்தவர்கள்... குறிப்பிட்ட சாதியின் வழக்கப்படி உட்பிரிவில் திருமணம் செய்வது கிடையாது என்பதுதான் பிரச்சனையே.. அதனால் 2 வீட்டிலுமே பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளவில்லை..

குட்பை
அதேசமயம், பிரிந்து வாழவும் முடியாமல், காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது.. பக்கத்து கிராமத்துக்கு வந்து மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு 2 பேரும் ஒன்றாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு முன்னர் முகேஷ் "குட் பை" என்று தன்னுடைய வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார்...

திருமணம்
ஆனால், தற்கொலை குறித்து எந்த கடிதமும் இருவரும் எழுதி வைக்கவில்லை.. போலீசார் இந்த தற்கொலை குறித்து, அவரவர் வீட்டுக்கு தெரியப்படுத்தினார்கள்.. இரு தரப்பு குடும்பத்தினரும் சடலங்களை கண்டு கதறி கதறி அழுதனர்.. விருப்பப்படி கல்யாணம் செய்து வைக்க முடியாமல் போய்விட்டதே என்று கண்ணீர் விட்டனர்.. இதனையடுத்து இரு வீட்டாரும் பேசி, தற்கொலை செய்து கொண்ட தங்களது பிள்ளைகளின் ஆசையை சாவுக்கு பிறகாவது நிறைவேற்றி விடலாம் என்று முடிவு செய்தனர்.

மயானம்
அதன்படி, மயானத்தில் காதல் ஜோடிக்கு திருமண சடங்குகள் ஏற்படானது.. இரு வீட்டு குடும்பங்கள், உறவினர்கள் முன்னிலையில், திருமணமும் நடந்து முடிந்தது.. அனைத்து சடங்குகளையும் செய்த பிறகு,2 பேரையும் ஒரே குழியில் வைத்து புதைத்தனர்.. சுடுகாட்டில் நடந்த இந்த திருமணம் மகாராஷ்டிராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications