அஜித் பவாரால் என்சிபி உறுப்பினர்களை நீக்க முடியாது.. அவருக்கு அதிகாரம் இல்லை.. சரத் பவார் அதிரடி!
அஜித் பவாரால் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்களை நீக்க முடியாது. அஜித் பவாரால் விப் நோட்டீஸ் அனுப்ப முடியாது, அவர் என்சிபியின் சட்டசபை தலைவர் கிடையாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்
Recommended Video
மும்பை: அஜித் பவாரால் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்களை நீக்க முடியாது. அஜித் பவாரால் விப் நோட்டீஸ் அனுப்ப முடியாது, அவர் என்சிபியின் சட்டசபை தலைவர் கிடையாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.
இன்று சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மும்பையில் மீடியா முன்னிலை அணிவகுப்பு நடத்தினார்கள். 162 எம்எல்ஏக்கள் ஒன்றாக சேர்ந்து அணிவகுப்பு நடத்தி தங்கள் பெரும்பான்மையை நிரூபித்தனர்.
மகாராஷ்டிராவில் எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் அவர்கள் இந்த அணிவகுப்பை நடத்தினார்கள். 162 எம்எல்ஏக்கள் முன்னிலையில் தேசியவாத தலைவர் சரத் பவார் பேசினார்.

என்ன பேச்சு
சரத் பவார் தனது பேச்சில், பாஜகவிற்கு பாடம் கற்பிப்போம். அஜித் பவாரால் என்சிபி உறுப்பினர்களை நீக்க முடியாது. அஜித் பவாரால் விப் நோட்டீஸ் அனுப்ப முடியாது. என்சிபி உறுப்பினர்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

அஜித் பவார் எப்படி
அஜித் பவாரை என்சிபி சட்டமன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். இது மணிப்பூர், கோவா கிடையாது: மஹாராஷ்டிரா. அதை நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள். பல மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்துகிறது. அவர்கள் தங்கள் சக்தியை தவறாக பயன்படுகிறார்கள்.

நாங்கள் பாடம்
அவர்களுக்கு நாங்கள் பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது. கர்நாடகாவில் அவர்கள் இதேபோல்தான் செய்தார்கள். ஆனால் அந்த நிலை இங்கு வராது. எங்களுக்கு 162 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. நீங்களே பாருங்கள்: நாங்கள்தான் மெஜாரிட்டி. எப்போது வேண்டுமானாலும் நாங்கள் சட்டசபை கூட்டத்தை சந்திக்க தயார்.

தீர்ப்பு இருக்கிறது
உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு காத்து இருக்கிறோம். 288 எம்எல்ஏக்களில் 162 பேர் எங்களிடம்தான் இருக்கிறார்கள்.நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.
எந்த ஒரு என்சிபி எம்எல்ஏவும் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications