மகாராஷ்டிராவில் ஓய்ந்தது பரபரப்பு...சரத்பவாருடன் இணைந்து இஃப்தார் விருந்தில் பங்கேற்ற அஜித் பவார்!
மும்பை: மகாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 13 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு அஜித் பவார் தாவப் போகிறார் என்ற பஞ்சாயத்துகள் முடிவுக்கு வந்துள்ளன.
மகாராஷ்டிராவில் 2019-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக 105; சிவசேனா 63; சரத்பவாரின் என்சிபி 41; காங்கிரஸ் 44 இடங்களில் வென்றன. முதல்வர் பதவி விவகாரத்தில் சிவசேனா, பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கால் நூற்றாண்டுகால சிவசேனா- பாஜக உறவு முறிந்தது. அப்போது சரத்பவாரின் என்சிபி கட்சியை பாஜக தம் பக்கம் இழுக்க முயற்சித்தது. சரத்பவாரின் உறவினரான அஜித் பவாரும் பாஜக பக்கம் போனார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்; அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். ஆனால் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்துக்குப் போனதால் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து சிவசேனா தமது பரம எதிரிகளான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸுடன் இணைந்து புதிய கூட்டணி அமைத்தது. அப்போதே அஜித்பவார் என்சிபிக்கும் திரும்ப்விட்டார். முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. பாஜகவோ சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மெஜாரிட்டி எம்.எல்.ஏக்களை இழுத்து உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்தது. தற்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராகி உள்ளார். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜக இணைந்து புதிய ஆட்சி நடைபெறுகிறது.
இந்தப் பின்னணியில் சிவசேனாவை உடைத்தது போல சரத்பவாரின் என்சிபியையும் சிதறவிட முடிவு செய்துள்ளது பாஜக. இப்போதும் அஜித் பவாரை அரவணைக்க தயாராகிவிட்டது பாஜக. அஜித் பவார் 2019-ல் சிங்கிள் எம்.எல்.ஏ.வாகத்தான் பாஜக பக்கம் போனார். இப்போது 13 எம்.எல்.ஏக்களை இழுத்துக் கொண்டு பாஜக பக்கம் ஓடப் போகிறாராம். ஆனால் சரத்பவாரோ, அப்படி எல்லாம் கட்சிக்கு துரோகம் செய்தால் எம்.எல்.ஏ. பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நேற்று சரத்பவாருடன் அஜித்பவார் இணைந்து பங்கேற்றார். அப்போது பாஜாவுக்கு தாவப் போவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறித்த கேள்விக்கு, திட்டவட்டமான மறுப்பை தெரிவித்தார் அஜித் பவார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications