மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்லவேளை அஜித் சீக்கிரம் முடிவு எடுத்தார்.. இல்லைன்னா மானம் போயிருக்கும்.. புலம்பும் பாஜக தலை!

நல்ல வேளை அஜித் பவார் தன்னுடைய முடிவை நேற்றே எடுத்தார், இல்லையென்றால் பாஜகவின் மானம் கப்பல் ஏறி இருக்கும் என்று பாஜகவின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்ஸே தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ajit Pawar resigns as Maharashtra deputy CM | துணை முதல்வர் பதவியிலிருந்து விலகினார் அஜீத் பவார்

    மும்பை: நல்ல வேளை அஜித் பவார் தன்னுடைய முடிவை நேற்றே எடுத்தார், இல்லையென்றால் பாஜகவின் மானம் கப்பல் ஏறி இருக்கும் என்று பாஜகவின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்ஸே தெரிவித்துள்ளார்.

    ஒருவழியாக மகாராஷ்டிரா அரசியல் பிரச்சனை முடியும் நிலையை எட்டி இருக்கிறது. அம்மாநில முதல்வராக நாளை சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். அங்கு பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவை என்சிபியின் அஜித் பவார் வாபஸ் வாங்கினார்.

    இதனால் அங்கு அஜித் பவார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பேட்டி

    பேட்டி

    அஜித் பவாரின் இந்த செயல் தொடர்பாக மகாராஷ்டிராவின் பாஜக மூத்த தலைவர் ஏக்நாத் கட்ஸே கருத்து தெரிவித்துள்ளார். அதில், அஜித் பவார் எவ்வளவு சீக்கிரமாக முடிவு எடுத்தாரோ அதுவரை எங்களுக்கு சந்தோசம். முதல் நாளே பதவி விலகிவிட்டார். இன்று வரை அவர் காத்திருக்கவில்லை.

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    ஒருவேளை அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு ரை காவத்திருந்தால் அது பாஜகவிற்கு பெரிய அவமானமாக மாறி இருக்கும். அவர்கள் எங்கள் மானத்தை ஒரு வகையில் காத்து இருக்கிறார். அது வரைக்கும் அவருக்கு நன்றி.

    ஆனால் ஆதரவு

    ஆனால் ஆதரவு

    ஆனால் அவர் தனக்கு எவ்வளவு பேர் ஆதரவு கொடுப்பார்கள் என்று முன்பே கணித்து இருக்க வேண்டும். தன் பக்கம் கட்சியை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் வருவார்கள் என்று கணித்து இருக்க வேண்டும். அவர் இப்படி செய்திருந்தால் பிரச்சனையே இருந்திருக்காது.

    சிவசேனா எப்படி

    சிவசேனா எப்படி

    நாங்களும் சிவசேனா உடன் சரியாக பேசி இருக்கலாம். சிவசேனா கட்சியுடன் பேசி தீர்க்கும் நிலையில்தான் பிரச்சனை இருந்தது. ஆனால் நாங்கள் அதை செய்யாமல் தவறவிட்டுவிட்டோம். இப்போது கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது, என்று ஏக்நாத் கட்ஸே குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Maharashtra: Ajit Pawar Should have told us before the supporting us says BJP Eknath Khadse.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X