மகாராஷ்டிராவில் டென்ஷன்.. காங். ஆலோசனைக் கூட்டத்தில் 6 எம்.எல்.ஏக்கள் ஆப்சென்ட்- பாஜகவுக்கு எஸ்கேப்?
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது முதலே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர் தப்பி ஓடுவார்கள் என்கிற விவாதம் அம்மாநில அரசியலில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கூட்டப்பட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 6 பேர் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது புதிய பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்தது பாஜக. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனாவின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் பாஜகவை ஆதரித்தனர். இதனால் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகவும் நேரிட்டது.

இதனைத் தொடர்ந்து சிவசேனா யாருக்கு சொந்தம் என்ற சிக்கல் எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றங்களிலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நடைபெற்றன. இறுதியாக ஏக்நாத் ஷிண்டேதான் உண்மையான சிவசேனா என தீர்ப்பு கிடைக்க உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாகிப் போனது.
இதே பாணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உடைக்கப்பட்டது. சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் தலைமையில் ஒரு கோஷ்டி பாஜகவை ஆதரித்தது. மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசிலும் பங்கேற்றது. தற்போது அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தான் உண்மையான என தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக குறி வைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அசோக் சவாண் அண்மையில் பாஜகவுக்கு தப்பி ஓடினார். அவருக்கு தற்போது ராஜ்யசபா எம்பி சீட் கொடுத்துவிட்டது பாஜக. அசோக் சவாணுடன் மொத்தம் 12 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவப் போவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த 6 பேரும் அசோக் சவான் பாணியில் பாஜகவுக்கு தாவக் கூடுமோ என்கிற பரபரப்பு நிலவி வருகிறது. ஆனால் அசோக் சவாண் இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறார். தாம் எந்த ஒரு எம்.எல்.ஏ.வையும் கூட்டிச் செல்லவில்லை என்கிறார் அசோக் சவாண். எப்ப பூகம்பம் வெடிக்குமோ?
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications