கூட்டணிக்குள்ளேயே எதிரும் புதிருமாக வேட்பாளர்கள்.. மகாராஷ்டிராவில் 29 தொகுதிகளில் நட்பு மோதல்!
மும்பை: மகராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் 29 தொகுதிகளில் ஒரே கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் எதிரும் புதிருமாக களத்தில் இறங்கியுள்ளனர். பாஜக கூட்டணியில் 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த கட்சிகள் 21 தொகுதிகளிலும் இப்படி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. கூட்டணி கட்சிகளே இப்படி வேட்பாளர்களை ஒருவரை ஒருவர் எதிர்த்து களமிறக்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் வரும் 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே உள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் மகாயுதி கூட்டணிக்கும் - காங்கிரஸ் சிவசேனா (உத்தவ் ) தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கூட்டணியும், ஆட்சியை தக்க வைக்க பாஜக கூட்டணியும் வியூகங்கள் வகுத்து வருகின்றன. இரு கூட்டணிகளும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.
மகாராஷ்டிராவில் உள்ள இரு கூட்டணிகளிலும் பெரிய கட்சிகள் அங்க வகிக்கின்றன. இதனால், தொகுதி பங்கீட்டில் இரு கூட்டணிக்குள்ளும் கடும் இழுபறி நீடித்தது. சொல்லப்போனால், வேட்பு மனு தாக்கல் முடியும் வரை பல தொகுதிகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், 29 தொகுதிகளில் ஒரே கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.
அதாவது, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான ஷின்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள 6 தொகுதிகளில் வேட்பாளர்களை ஒருவரை ஒருவர் எதிர்த்து நிறுத்தியிருக்கிறார்கள். இதில் மகாயுதி கூட்டணியில் மான்கூர்டு சிவாஜிநகர், அஸ்தி, சிந்த்கேட் ராஜா, கடோல், மோர்சி, தின்தோரி, ஸ்ரீராம்புர், புரந்தர் ஆகிய 6 தொகுதிகளில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பாஜக கூட்டணியில் இப்படி என்றால், காங்கிரஸ் கூட்டணியில், 21 தொகுதிகளில் இப்படி ஒரு மோதல் உள்ளது. மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சிகள் 21 தொகுதிகளில் ஒருவருக்கு எதிராக ஒருவர் வேட்பாளரை நிறுத்தி உள்ளனர். சமாஜ்வாடி கட்சி 6 தொகுதிகளில் காங்கிரஸ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
இப்படியாக மொத்தம் 29 தொகுதிகளில் கூட்டணியில் உள்ள கட்சிகளே ஒருவரை ஒருவர் எதிர்த்து வேட்பாளரை நிறுத்தி நட்பு மோதலில் இறங்கியுள்ளது மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications