அமித்ஷா ஆடிய ஆட்டம்.. மகாராஷ்டிரா பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை செம்ம ஸ்பீடு!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை சுமூகமாக முடிவு செய்வதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மகாயுதி தீவிரமாக இருக்கிறது. தற்போதைய தகவல்களின்படி மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக 140 முதல் 150 இடங்களிலும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 80, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 55 இடங்களிலும் போட்டியிடக் கூடும்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க இருக்கிறது. ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ந் தேதி நடைபெறும். இந்த வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த உடனேயே மகாராஷ்டிரா தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்பது எதிர்பார்ப்பு.

மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடியில் உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. லோக்சபா தேர்தலில் மகா விகாஸ் அகாடி மொத்தம் உள்ள 48 இடங்களில் 30 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக அணிக்கு 17 தொகுதிகள்தான் கிடைத்தன.
இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலானது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வாழ்வா? சாவா? என்பதாக இருக்கிறது. பாஜகவால்தான் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உடைக்கப்பட்டது. தங்களது கட்சிகளை உடைத்த பாஜகவுக்கு பதிலடி தருவதற்கு உத்தவ் தாககரேவும் சரத்பவாரும் மும்முரம் காட்டுகின்றனர்.
இதனிடையே பாஜக கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவாருடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தினார். அமித்ஷாவே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கி வைத்ததால் ஷிண்டேவும் அஜித்பவாரும் அடக்கியே வாசித்து வருகின்றனராம்.
தற்போதைய தகவல்களின் படி மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக மட்டும் 140 முதல் 150 தொகுதிகளில் போட்டியிடுமாம். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 80 தொகுதிகளும் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு 55 தொகுதிகளும் இதர தொகுதிகள் சிறிய கட்சிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுமாம். இந்த தொகுதிப் பங்கீட்டுக்கு ஷிண்டேவும் அஜித் பவாரும் ஒப்புதலும் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications