மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிபிஐ, ஐடி வைத்து எங்களை வளைக்க முடியாது.. நாங்கள் சிவசேனா.. பாஜகவிற்கு சவால்விடும் சஞ்சய் ராவத்!

எங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை, அதனால் வருமானவரித்துறை, சிபிஐயை வைத்து எங்களை பாஜகவால் வளைக்க முடியாது என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தீர்வு இன்னும் கிடைக்கவில்லை... சிவசேனா மீது கோபத்தில் இருக்கும் பாஜக

    மும்பை: எங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை, அதனால் வருமானவரித்துறை, சிபிஐயை வைத்து எங்களை பாஜகவால் வளைக்க முடியாது என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேட்டி அளித்துள்ளார்.

    மஹாராஷ்டிராவில் சிவசேனா தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக அதிரடி அரசியலை செய்து வருகிறது. என்ன நடந்தாலும் முதல்வர் பதவியை மட்டும் விட்டு கொடுக்க மாட்டோம். இதில் உறுதியாக இருக்கிறோம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.

    நிதின் கட்கரி வந்தால் சரியாகும்.. மகாராஷ்டிராவில் பாஜகவின் இறுதி மூவ்.. கடைசியில் இப்படி ஆகிட்டே!நிதின் கட்கரி வந்தால் சரியாகும்.. மகாராஷ்டிராவில் பாஜகவின் இறுதி மூவ்.. கடைசியில் இப்படி ஆகிட்டே!

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் தொடர்பாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேட்டி அளித்துள்ளார். அதில், எங்கள் எம்எல்ஏக்களை பாஜகவால் வாங்க முடியாது. எங்களுக்கு அந்த பயம் கிடையாது. எம்எல்ஏக்கள் யாரும் இன்னும் அதிகார பூர்வமாக பதவி ஏற்கவில்லை. அதனால் அவர்களுக்கு இன்னும் அரசாங்க வீடுகள் வழங்கப்படவில்லை.

    பயம் இல்லை

    பயம் இல்லை

    இதனால் மும்பைக்கு வந்து இருக்கும் பல மாவட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் தங்க இடம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இடம் வேண்டும் என்பதால் ஹோட்டல் பார்த்து இருக்கிறோம். மற்றபடி குதிரை பேரத்திற்கு அஞ்சி நாங்கள் ஹோட்டல் பார்க்கவில்லை என்று கூறிக்கொள்கிறோம்.

    பாஜக ஆட்சி

    பாஜக ஆட்சி

    மகாராஷ்டிராவில் பாஜக ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர முயற்சி செய்கிறது என்று நினைக்கிறேன். மக்களின் தீர்ப்பு எதிரான நடவடிக்கை ஆகும் இது.மக்கள் வாக்களித்தது ஏன்? உங்களால் ஆட்சி அமைக்க வழி இருந்தும் செய்யாமல் இருப்பது ஏன்?

    சட்டம் மக்களுக்கானது

    சட்டம் மக்களுக்கானது

    அரசியலமைப்பு சட்டம் என்பது மக்களுக்கானது. அது பாஜகவின் சொத்து கிடையாது. அவர்களால் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. அப்படி அவர்கள் செயல்பட நினைத்தால் மோசமான விளைவுகளை சந்திப்பார்கள்.

    எங்கள் முதல்வர்

    எங்கள் முதல்வர்

    எங்கள் முதல்வர்தான் மகாராஷ்டிராவை ஆளப்போவது. எங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை. எங்களை அமலாக்கத்துறை, சிபிஐ, போலீஸ் வைத்து வளைக்க முடியாது. பாஜக மற்றவர்களிடம் காட்டும் அரசியலை எங்களிடம் காட்ட முடியாது என்று, சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    English summary
    Maharashtra: BJP can't tackle us with CBI and IT says Shiv Sena's Sanjay Raut.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X