நீங்கதான் காரணம்.. மாறி மாறி விமர்சிக்கும் மூத்த தலைகள்.. அஜித்தால் பாஜகவிற்கு இப்படி ஒரு நிலையா?
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் அஜித் பவாரின் அரசியல் சாகசம் பாஜகவிற்குள் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கட்சிக்குள் இதனால் புதிதாக பூசல் உருவாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் நாளை சிவசேனா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்க உள்ளது. அங்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.
அஜித் பவாரின் அரசியல் பல்டி காரணமாக அங்கு பாஜக ஆட்சி கவிழ்ந்தது. கடைசி நேரத்தில் அஜித் பவார் ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கியதால் அங்கு பாஜக ஆட்சி கவிழ்ந்தது.

நிறைய பிரச்சனை
அஜித் பவாரின் இந்த செயல் பாஜகவிற்குள் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒருவர் மீது ஒருவர் பாஜகவில் மாற்றி மாற்றி புகார் அளித்து வருகிறார்கள். இந்த மொத்த பிரச்சனைக்கும் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும். அது யார்? தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்பாரா அல்லது வேறு தலைவர்கள் பொறுப்பேற்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

என்ன பேட்டி
அவர் தனது பேட்டியில், என்னை பொறுத்தவரை அஜித் பவாரை பாஜக நம்பி இருக்க கூடாது. அவரை அப்படியே நம்பி முடிவுகளை எடுத்து இருக்க கூடாது. பாஜகவில் சில தலைவர்கள் அஜித் பவார் வந்ததும் அவரை ஏற்றுக்கொண்டார்கள்.

ஆதரவு தெரிவித்தார்
அஜித் பவார் அவராகவேதான் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்தார். ஆனால் பாஜக அவரை ஏற்றுக்கொள்ளும் முன் கொஞ்சம் யோசித்து இருக்க வேண்டும். அவர் நிறைய குற்றங்கள் செய்துள்ளார். அவர் மீது ஊழல் வழக்குகள் இருக்கிறது.

எச்சரித்தேன்
அவருடன் சேர கூடாது என்று நான் அப்போதே எச்சரித்தேன். ஆனால் பாஜகவில் யாரும் அதை கேட்கவில்லை. இப்போது பாஜகவின் மதிப்பு சரிந்துவிட்டது. மக்கள் மத்தியில் எங்களின் மதிப்பு சரிந்துவிட்டது. தேவையில்லாத நிறைய விஷயங்கள் நடந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

இன்னும் சிலர்
இதேபோல் அஜித் பவாரின் வருகையை ஏற்றதற்கு எதிராக பாஜகவில் இன்னும் சில தலைவர் போர்க்கொடி தூக்க தொடங்கி உள்ளனர். முக்கியமாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக வேண்டும் என்று அவசரப்பட்டு இப்படி செய்துள்ளார் என்று சில மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள். இதனால் அங்கு பாஜகவிற்கு உள்ளேயே சில பிரச்சனைகள் தொடங்கிவிட்டது என்கிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications