ட்விஸ்ட்! கடைசி நொடியில் பின்வாங்கிய பாஜக! அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலை தட்டி தூக்கிய உத்தவ் சிவசேனா
மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதியில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி வெற்றி பெற்றுள்ளது. அங்கு பாஜக போட்டியிடாத நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா எளிதாக வென்றுள்ளது.
5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தீவிரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கடந்த 3ம் தேதி இந்த சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
தெலுங்கானாவில் முனுகோடு, மஹாராஷ்டிராவில் அந்தேரி கிழக்கு, பீகாரில் இரண்டு தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 1 தொகுதியில் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.

அந்தேரி கிழக்கு
இந்த நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதில் அந்தேரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே சார்பாக மறைந்த எம்எல்ஏ ரமேஷ் லட்கேவின் மனைவி ருத்துஜா ரமேஷ் நிறுத்தப்பட்டார். ரமேஷ் லட்கே மரணம் காரணமாக இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவர் சிவசேனாவின் எம்எல்ஏ ஆவார்.

ஏன் தேர்தல்?
இதையடுத்து அவரின் மனைவி ருத்துஜா இங்கு உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பாக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சட்டசபை தேர்தல் அங்கு ஆட்சி மாற்றட்டத்திற்கு பின்பாக நடைபெற்றுகிறது. மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 39 பேர் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி வைத்தனர்.

மோதல்
இதனால் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றார். இந்த நிலையில்தான் தற்போது மகாராஷ்டிராவில் அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. வேட்பாளர் இறந்து அவரின் மனைவி போட்டியிட்டதாக உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளருக்கு எதிராக நாங்கள் போட்டியிடவில்லை என்று ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அறிவித்தது.

பின்வாங்கிய பாஜக
பாஜக வேட்பாளர் போட்டியிட்டால் அவரை ஆதரிப்போம் என்றும் தெரிவித்தது. இதையடுத்து பாஜக சார்பாக பட்டேல் என்பவர் தேர்தல் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசியில் அவர் வேட்புமனுவை வாபஸ் வாங்கினார். பாஜக தலைமையின் உத்தரவின்படி அவர் வேட்புமனுவை வாபஸ் வாங்கினார்., உத்தவ் தாக்கரேவின் சிவசேனா வேட்பளார் ருத்துஜாவிற்கு அங்கு ராஜ் தாக்கரேவின் நவ நிர்மான் சேனை ஆதரவு வழங்கியது.

ரிசல்ட் என்ன?
காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ருத்துஜாவிற்கு ஆதரவு அளித்தன. இதனால் தேர்தலுக்கு முன்பே அவரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. இவரை தவிர மற்ற வேட்பாளர்கள் எல்லோருமே சுயேச்சை வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ருத்துஜா வெற்றி கிட்டத்தட்டஉறுதியானது. இந்த இடைத்தேர்தலில் மக்களும் பெரிதாக விருப்பம் காட்டவில்லை. இந்த இடைத்தேர்தலில் 31.74% வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்த நிலையில்தான் 16 சுற்றுகள் வரை எண்ணப்பட்ட வாக்குகளில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி 66530 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது . இரண்டாம் இடத்தை அங்கு 12806 வாக்குகள் பெற்று நோட்டா பிடித்தது.
அங்கு பாஜக போட்டியிடாத நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா எளிதாக வெற்றியை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications