மகாராஷ்டிரா.. ஆட்சி அமைத்தாலும் துறைகள் ஒதுக்கீட்டால் அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி- ஷிண்டே அடம்!
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்ற போதும் அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் உள்துறையை தமக்கு ஒதுக்கியாக வேண்டும் என்பதில் சிவசேனா தலைவரும் துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே பிடிவாதமாக இருப்பதால் இந்த இழுபறி தொடருகிறது. மகாராஷ்டிராவில் வரும் 11-ந் தேதி அல்லது 12-ந் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம் என்கின்றன அம்மாநில அரசியல் வட்டாரங்கள்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாயுக்தி கூட்டணி புதிய ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது. இந்த இழுபறியுடன் முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்களாக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸின் அஜித்பவார் பதவியேற்றனர்.

இதனையடுத்து 15-வது மகாராஷ்டிரா சடசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் மகாயுக்தி கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பதவியேற்க மறுத்தனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்திலும் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர் பதவியை ஏற்க மறுத்து வந்த சிவசேனா தலைவர் ஷிண்டே, பிரதமர் மோடியின் தலையீட்டால் அந்த பதவியை ஏற்றுக் கொண்டார். ஆனால் தற்போது தமக்கு உள்துறை இலாகாதான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதில் ஷிண்டே உறுதியாக நிற்கிறார்.
கடந்த ஆட்சியில் துணை முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் வசம், உள்துறை இருந்தது; அதே பார்முலாவை தற்போதும் செயல்படுத்த வேண்டும் என்பது ஏக்நாத் ஷிண்டேவின் கருத்து. ஆனால் இதனை பாஜகவோ திட்டவட்டமாக ஏற்கவே முடியாது என்கிறது. அதேபோல மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைக்க எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத தமக்கு முக்கியமான துறைகளை ஒதுக்கியாக வேண்டும் என அஜித்பவாரும் பாஜக மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இரு கட்சிகளும் கடும் நெருக்கடி கொடுப்பதாலேயே அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை. இது தொடர்பாக மூன்று கட்சிகளிடையே இடைவிடாத பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இன்று இரவுக்குள் தெளிவான முடிவுகள் வெளியாகும் என்றும் வரும் 11-ந் தேதி அல்லது12-ந் தேதி அமைச்சரவை விரிவாக்கம் இடம் பெறலாம் என்றும் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications