போச்சு.. மகளிர் உதவி தொகையை ’கட்’ செய்த அரசு! இனி 500 ரூபாய் மட்டுமே கிடைக்கும்! என்னாச்சு தெரியுமா?
மும்பை: தமிழகத்தில் மகளிருக்கு உரிமை தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுவது போல மகாராஷ்டிராவில் மகளிர்க்கு மாதம் தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 8 லட்சம் பேருக்கு 1500 ரூபாய் உதவி தொகையில் இருந்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இரு திட்டங்களின் கீழ் ஒரே பயனாளிகள் 2500 ரூபாய்க்கு மேல் பெற்று வந்த நிலையில் அவர்களை கண்டறிந்த அரசு தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
2021 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு மகளிர் உரிமைத் தொகை மிக முக்கிய காரணமாக இருந்தது. மாதம் தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பு மகளிர் வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சூழலில் சில வருட இடைவெளிக்குப் பிறகு மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையே இந்தியா முழுவதும் இந்த திட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் பல மாநில அரசுகள் மகளிர்க்கு உதவித்தொகை வழங்கி வருகின்றன.

டெல்லி, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்தது. எதிர்பார்த்தபடியே அந்த வாக்குறுதி அந்த கட்சிக்கு பெருவாரியான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. சொன்னபடியே முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசின் முக்கிய நலத் திட்டமான முதலமைச்சரின் மகளிர் நலத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் பெண்கள் பட்டியலில் இருந்து 8 லட்சம் பேருக்கு வழங்கப்படும் நிதியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே மற்றொரு திட்டமான "நமோ விவசாயிகள் உதவித் தொகை கீழ் மாதம் 1,000 உதவித் தொகையை பெற்று வருவதை அரசு கண்டறிந்துள்ளது. இதனால், இந்த 8 லட்சம் பெண்களுக்கு இனி மாதம் 1,500 ரூபாயை ஒதுக்காமல், மாதம் 500 ரூபாயை மட்டுமே வழங்கப்படும்.
அதாவது மகாராஷ்டிரா அரசு கொண்டு வந்த மாஜி லட்கி பஹின் திட்டத்தின் விதியின் கீழ் அரசின் உதவித் தொகை பெறுபவர்கள், மாத உதவித் தொகை 1,500ஐ மீறக் கூடாது என்பது விதி. இது தற்போது கண்டறியப்பட்டுள்ளதால், பயனாளிகள் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் தொடக்கத்தில் 2.63 கோடி பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆய்வுப்பணிகள் மற்றும் பல தடவைகளான சரிபார்ப்புகளுக்குப் பிறகு, இந்த எண்ணிக்கை கடந்த பிப்ரவரியில் 2.52 கோடியாக குறைக்கப்பட்டது.
இறுதியாக மார்ச்சில் 2.46 கோடி பெண்கள் தகுதியுடையோராக இறுதி செய்யப்பட்டனர். மகராஷ்டிர மாநில அரசு தற்போது பயனாளிகளின் பட்டியலை முழுமையாக சரிபார்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசு அதிகாரிகள் கூறுகையில், முதலில் மாவட்டங்களிலிருந்து வந்த விண்ணப்பங்கள் மாநில தலைமையகத்தில் பரிசீலிக்கப்பட்டது. அதன் பிறகு தகுதியுள்ளவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டனர் என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் கூறுகையில், எந்த விதிமுறைகளையும் மாற்றவில்லை. நிதியையும் குறைக்கவில்லை. தகுதியுள்ள பெண்கள் மட்டுமே உதவியைப் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், இந்த சீர்திருத்தத்தின் பின்னர் 10 முதல் 15 லட்சம் பெண்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.
இந்த மாஜி லட்கி பஹின் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், 18 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும், வருட வருமானம் 2.5 லட்சத்தைக் கடந்திருக்கக் கூடாது, மேலும் அரசு வேலையில் இருக்கக் கூடாது, நான்கு சக்கர வாகனம் இருந்தாலும் உதவித் தொகை கிடையாது, மற்ற அரசு நலத்திட்டங்களில் இருந்து நிதி பெற்றாலும், ஒரே மாதத்தில் ₹1,500ஐ விட அதிகமாக இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications